பிறந்தநாள் வாழ்த்துக்கள் -அம்மா சியாமளா ராஜசேகர்
பெற்றெடுக்கா அன்னையே -உன்னில்
பெற்றெடுத்தேன் பேரின்பத்தையே
எழுத்தில் கரம் கொடுத்தாய்
எழுதிட நல் வழி அமைத்தாய் !
வெண்பா புனைந்து- எனை
அன்பாய் அரவணைத்தாய்
அகவையில் அடிவைத்தாய்
அன்பினில் என்றென்றும் இனித்தாய் !!
நடுனிலையானாய் நீயே
எல்லோர்க்கும் இனியவர் நீயே
நல்லெண்ணம் கொண்டாய் நீயே
என்மனதில் நிலைத்தாய் தாயே !
இலக்கணத்தை இலகுவாக்கி
எளிதான தமிழில் நித்தம் உன் கவி
சித்தம் தெளிய சிந்தை குளிர்வித்தாய்
முத்தமிழின் மூத்தவளே...!
பூமணம் வீசும் உன்மனதுடன்
சேர்ந்தே வீசும் நார்மனம் நானே
சாமரம் வீசிடும் கவிதைகள் யாவும்
சமர்ப்பணம் நின் பாதம் தாயே !
உயிர்கள்
உணர்வுகள்
உறவுகள்
உன்னன்பிற்கு ஈடில்லை தாயே !
சுகமுடனும்
செளந்தர்யமுடனும்
மனக்குறை ஏதுமின்றி
மகிழ்வாய் பல்லாண்டு வாழ !
மனம் ஒன்றி தியானித்து
இறையிடம் மன்றாடி
வரமொன்றை வாங்கி உமக்கு
சமர்ப்பணம் செய்வேன் தாயே !
வாழ்த்திடும் வயதில்லை தாயே
வணங்குகிறேன் நின் ஆசிவேண்டி
வானமும் பூமியும் வாழும் வரை
வளரட்டும் நின் புகழ் தாயே !!
(குறிப்பு :- 23.11.2014 அன்று பிறந்தநாள் காணும் அம்மா சியாமளா ராஜசேகர் அவர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம் )