நகைச்சுவை நோயிலிருந்து முக்தி
அறுவை சிகிச்சை முடிந்து கண்விழித்த நோயாளி மருத்துவரைப் பார்த்து "டாக்டர் .. நோயிலிருந்து நான் முக்தி அடைந்துவிட்டேனா" என்றான். அதற்கு, அவனுக்குக் கிடைத்த பதில் "அப்பனே ! உனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பூவுலகில் இருக்கிறார். நான் சித்ரகுப்தன்" என்று.

