கடலோரக் கூடார வாசிகள்
ஐலசா ===ஐலசா
ஐலேசா ===ஐலேசா
ஏலேலோ ===ஏலேலோ ==
ஐலசா.........
துடிக்கும் மீனை தூக்குப் போடு
கண்ணையா......ஐலேசா
கூடயை நிறைச்சிக்கோ
பொன்னையா......ஐலேசா
கொட்டிப்புட்டு துட்டு
வாங்கு சுப்பையா....ஐலேசா
பெட்டிக்குள்ளே துட்டைப் போடு
குப்பம்மா......ஐலேசா
ஐலசா===ஐலசா===
ஐலேசா....ஐலேசா...
ஏலேலோ.....ஏலேலோ...
ஐலேசா....ஐலேசா.....
ஐயா வாரார் .... ஐலேசா
கை மேலே பையைப் பார்...ஐலேசா
கண்ண மூக்கப் பார்த்து
அள்ளப் போரார்....ஐலேசா
கவணமாகப் பாத்துகோடா...ஐலேசா
வாயாடியே வென்று விடுவார்....ஐலேசா
வாதாடப் பழகிக்கோடா.....ஐலேசா.....
ஐலேசா ===ஐலேசா
ஏலேலோ===ஏலேலோ
ஐலேசா===ஐலேசா.....
துண்டாகப் போன மீன்
எடுத்து சின்னம்மா....ஐலேசா
தூக்கலாக உப்பு போட்டு...ஐலேசா
உச்சி வெயிலில் வெட்ட வெளியில்
போட்டு.....ஐலேசா
பக்குபமாக கருவாடாய் எடுத்து
விடு சின்னம்மா....ஐலேசா.....
ஐலேசா===ஐலேசா
ஏலேலோ===ஏலேலோ
ஐலேசா===ஐலேசா.....
கட்டு மரம ஏற வேண்டும்
மாமாவே மாமாவே ...ஐலேசா
கட்டுச் சோறு கட்டிப்புட்டேன்
மாமாவே மாமாவே....ஐலேசா
கருவாடும் வறுத்து வைத்தேன்
மாமாவே மாமாவே....ஐலேசா
கண்ணாத்தா என் கையாலே
ஆக்கி வைத்தேன் மாமாவே
என் மாமாவே.....
ஐலேசா===ஐலேசா
ஏலேலோ===ஏலலோ
ஐலேசா==ஐலேசா.....
கோழி கூவும் நேரம் நான்
வீடு வருவேன்....ஐலேசா
எரியும் விளக்கை தூண்டி
விட்டு காத்திரு கண்ணம்மா....ஐலேசா
கூடாரத்தை மூடிக்கோ கண்ணம்மா...ஐலேசா
கூடாத பசங்க நடமாட்டம் உள்ளதடி...ஐலேசா....
ஐலேசா=====ஐலேசா
ஏலேலோ=====ஏலேலோ
ஐலேசா===ஐலேசா......
கூடார வீட்டுக்குள்ளே மாமாவே
மாமாவே....ஐலேசா
கூராண அருவாள் இருக்கு
மாமாவே மாமாவே...ஐலேசா
கூடவே துணிவும் இருக்கு
மாமாவே மாமாவே.....ஐலேசா
கூவி உரக்க அழைக்க
குரலும் இருக்கு மாமாவே
மாமாவே....ஐலேசா.....
ஐலேசா===ஐலேசா
ஏலேலோ===ஏலேலோ
ஐலேசா===ஐலேசா....
அப்படி தள்ளுடா ..ஐலேசா
இப்படி பிடிடிடா...ஐலேசா
ஐலேசா.....ஐலேசா....