ரசிக்கத் தெரிந்தால்

குளிர்மை இரவு
அங்கே குளிர் தரும் நிலவு !

இசை பாடும் நதி
தாளம் போட்டு ஆடிடும் ரதி !

இயற்கை இரவை கொஞ்ச
இரவும் சொன்னது மழலை மொழி !

மழலை மொழி கேட்ட காற்று
மாறியதோ தென்றல் !

இரவின் இனிமை
கிடைக்கும் சுகமோ தனிமை !

ரசிக்கத் தெரிந்தால்
சுடும் பகலும் இனிமை !

எழுதியவர் : fasrina (24-Nov-14, 12:59 pm)
பார்வை : 109

மேலே