அம்மா

அம்மா அம்மா நீ இல்லாமல்
இரவு விடியதம்மா
கடவுள் இருப்பதால்தான்
இரவு பகல் வந்து போகிறதாம்
உண்மைதான் கடவுள் நீ என்பதால்

எவ்வளவு பெரிய மொரடனாக
இருந்தாலும் உன் முகம்
பார்க்கும் போது குழந்தையாக
மாறுகிறான் - உன் தியாகத்தை
நினைத்து வியக்கிறேன்
வியந்து பெருமூச்சு விடுகிறேன்

உனக்காக கவிதைகள் , பாடல்கள்
ஏராளம் அம்மா , உன் தாலாட்டுக்கு
மயங்காத உயிர் உண்டா அம்மா

விவரம் தெரியும்வரை மார்பில்
உறக்கம் - விவரம் தெரிந்த பின்
மடியிலே உறக்கம் நீ கடவுளின்
கடவுளம்மா !!!!!!

எழுதியவர் : வே.அழகேசன் (24-Nov-14, 8:07 pm)
Tanglish : amma
பார்வை : 295

மேலே