வெள்ளாந்தியின் விசும்பல்

உனக்குள் உயிராகி
உடலுக்குள் உருவாகி
உன்னுடன் உறவாடி
கலிதுன்பம் தீர்த்திட
இம்மண்ணில் பிறந்தேனம்மா !

உன் முகம் கண்டு
இன்பத்தை களித்தேன்னம்மா
உன்னுள்ளே இருந்திடவே கருவில்
உனை எட்டி உதைத்தேனம்மா
பிரித்தாளும் சூழ்ச்சியில் வீழ்ந்தேனம்மா !!

பிறர் மனம் பிரித்தாளத் தெரியாது
இம்மண்ணில் வளர்ந்தேனம்மா !
உண்மையென நம்பியது பொய்த்துப்போக
பொய்மை ஏதேன அறியாது தவித்துப் போக
இவ்வுலகம் உன்கருவரை போல்
இருட்டாய் தெரியுதம்மா !!

சுகம் துக்கம் என்னுள்
மாறி மாறி செழித்தோங்க
மாறிவரும் உலகத்திலே
மேனியும் மனமும் வாடி வதங்குதம்மா
உதிரத்தை உணவாக்கி அமுதப்பால்
தந்தெனை ஆளாக்கினாய் தாயே !!

அன்பெனும் கூட்டில் அடைபட்டு
நற்பண்புடன் எனை வளர்த்தாய் நீயே !
கற்குவியலாய் கயவர்கள் இங்கிருக்க
கைவிலங்கிட்டு ஒதுங்கியே நான் போக
கலிகால குணமுடன் பிறக்காததெண்ணி
தினம் தினம் கண்ணீரால் நனைந்தேனம்மா !!

தினம் உந்தன் கதகதப்பில்
தீரத்தை மறந்தேனம்மா
நல்வழி படுத்த எண்ணி எனை
நடக்கும் தீமையை கண்டு
கண் மூடி கிடக்கச் செய்தாயம்மா!

உனக்கு நானொரு பிள்ளை அதையெண்ணி
மூலையை வளர்த்து கோழையாக்கினாய்
முரடனாய் வளராது மூடனாக்கினாய்
முன்பின் நடப்பது கண்டும் மறதியாக்கினாய்
இறுதியாய் எனை இவ்வுலகில்
ஏய்க்கும் மனிதனுக்கு பலியாக்கினாய்!

பாசத்தால் ஊமையாக்கினாய்
பரிதவிக்கும் ஏழைக்கு
உதவா ஏழ்மையாக்கினாய்
ஏனம்மா எனை இளவாக்கினாய்
இருதயம் மட்டும் இரும்பாக்கினாய்
மருபிறப்போன்றிருந்தால் மாற்றிடு தாயே
மண்ணில் வீழ்ந்திடாது வளர்த்திடு தாயே !

எழுதியவர் : கனகரத்தினம் (25-Nov-14, 1:40 am)
பார்வை : 132

மேலே