ஊடல்

உன்னால் தினந்தோறும்
வேண்டாதவனாக
வேலை வேட்டியில்லாதவனாக
மனச்சஞ்சலத்தில் கலக்கத்தில்
உன் மனக் காய்ச்சலில்....

எல்லோரும் ஆகாயம்
தொட்டபின் எனை நினைத்து நீ
ஓரக் கண்ணால் முறைப்பதும்
முறைத்துப் பார்ப்பதும் தெரிந்த விடயமே...

ஒழுக்கமெனும் சிறையில்
எனை அடைக்கப் பார்க்கின்றாய்
எனக்கும் புரிகிறது புரிகிறது
உன் மவுனம் ...

எனக்கென்று மன மானப் பூச்சு
வெண்மை சுயமாகவும்
பசுமை யாக சிந்திக்கவும்
வண்ணமானவிடியலை சந்திக்கவும்
என் மீது இறைத்துப் பார்க்கிறது
வண்ண வண்ண சுண்ணாம்புக் கற்களாக ...

உன் கோபம் புரிகிறது
என்கோபம் என்னிடம்
கிள்ளாமல் கிள்ளிப் பார்க்கிறது
ரோஜா முட்கள்
ரசித்து சிறைவைக்கிறது...

வாழ்க்கை வீதியில்
வலம் வரத் தேராக அல்ல
வண்டிச் சக்கரமாக ஓடி ஆடி
வேகமாகப் பிடிக்க நினைக்கிறது
எட்டாத வானத்தை ....

உன் மீது வைத்த அன்பும்
என் மீதுநீ வைத்த அன்பும்
என்றும் மாறாது மறையாது
எண்ணங்களும் நினைவுகளும்
தேரோட்டிப் பார்க்கிறது
வெட்ட வானில்...!

தலை துண்டித்த பின்
தழைக்கின்ற வாழைக்கும்
நிமிர்ந்து தலை தூக்கும்
யார் துணையுமில்லாமல்
புதுமை நாற்று போல் ....!

இனியும் விடியும் விடியல்
உன்னோடு விடியும் நாள்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
தீபந்த நாவொடு திரியாக வருகிறேன்
வெளிச்ச விளக்கை ஏற்றுவதற்கு....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (26-Nov-14, 3:01 pm)
Tanglish : oodal
பார்வை : 709

மேலே