ஒரு காதல் போராட்டம் இரு மனங்களிலும் பகுதி 02-புவனா சக்தி
அர்ஜுன் உள்ளே செல்லவும் ஒரு பெண் ஒடி வந்து அர்ஜுனை கட்டி அனைத்து அழத்தொடங்கினார் அவர் தான் மகாலக்ஷ்மி அர்ஜுனின் அம்மா. அர்ஜுன் அம்மாவின் கண்ணீரை துடைத்து விட்டு அழாதீங்கம்மா என்று ஆறுதல் கூறினான். படுக்கையில் படுத்திருப்பவர் பக்கம் சென்று தாத்தா நான் அர்ஜுன் வந்துதிருக்கேன் பருங்க என்று அழைத்தான். அவன் அழைத்தது அவரின் காதுகளில் விழவில்லை போழும் அவர் எந்த அசைவும் காட்டவில்லை அதைப் பார்த்து மீண்டும் மகாலக்ஷ்மி அழத்தொடங்கினார். அம்மா என்ன சின்ன புள்ள மாதிரி அழரிங்க தாத்தாவுக்கு ஒன்னும் ஆகாது என்று ஆறுதல் கூறியும் மகாலக்ஷ்மிக்கு அழுகையை அடக்க முடியவில்லை.
படுக்கையில் இருக்கும் விஸ்வனாதன் அர்ஜுனின் தாத்தா அந்த காலத்திலேயே மிக சிறு வயதில் வியாபாரம் செய்து இலச்சக்கணக்கில் சம்பாதித்தவர்.அவருக்கு ஒரு மகன் மட்டும் தான் அவரை நன்கு படிக்க வைத்தார் அவருக்கு மகாலக்ஷ்மியை திருமணம் செய்துவைத்தார். விஸ்வனாதனுக்கு மகள் இல்லாத குறையை போக்கினார் மகாலக்ஷ்மி. விஷ்வனாதனை தனது தந்தை போல என்னினார் மகாலக்ஷ்மி தந்தை விஷ்வனாதன் சம்பாதித்த பணத்தை பல மடங்கு பெருக்கினார் அவரது மகன் குமார்.
நல்லப்படியாக அவர்களது வாழ்க்கை சென்றுக்கொண்டு இருந்தது மகாலக்ஷ்மிக்கு வெகு நட்களாக குழந்தைகள் இல்லாமல் தவமாய் தவமிருந்து பெற்றவன் தான் அர்ஜுன் கிருஷ்ணா. இரண்டு ஆண்டுக்கு முன்பு ஒரு விபத்தில் தந்தையை இழந்தான் கிருஷ்ணா. கணவனும் இறந்துவிட தன்னை மகளுக்கும் மேலாக எண்ணி பாசம் வைத்த மாமனரும் இப்படி படுத்த படுக்கையாக இருக்க நொறுங்கிப்போனார் மகாலக்ஷ்மி.
மௌனமாக மகாலக்ஷ்மியும் அர்ஜுனும் விஷ்வனாதன் அருகில் அமர்ந்து இருந்தார்கள். அப்போது தனது கைமேல் எதோ படுவதுப்போல உணர்ந்து பார்த்தான் அர்ஜுன் அப்போது விஷ்வனாதன் அவன் கைமீது தனது கையை வைத்தார். அர்ஜுன் தாத்தா தாத்தா என்றான் மகாலஷ்மியும் கண் விழிக்க அருகில் வந்து என்ன வேணும் மாமா என்றார் சிறு அமைதிக்குப்பின் அவர் படுக்கையில் இருந்து எழ முயற்சிக்க இருவரும் உதவி செய்ய தலையனையில் சாய்ந்து உட்கர்ந்தார்.
அர்ஜுனின் தலையை கோதியவாரு என்ன ரொம்ப பயந்திட்டியா என்று கேட்க அவர் கையை பற்றிக்கொண்டு ரொம்ப பயந்திட்டோம் தாத்தா என்று சொல்லி வருத்தப்பட்டான் அர்ஜுன் . அதற்கு விஸ்வனாதன் நான் எப்புடி செல்லம் உங்களை எல்லாம் விட்டுட்டு போவேன் இன்னும் நெறய பாக்கனும் இந்த பேரணோட கல்யாணாம் அப்பறம் கொள்ளூபேரன பாக்கனும் என சொல்லி சிரித்தார்.
போங்க தாத்தா இப்பக்கூட உங்களூக்கு ஜோக் தான் என்று அர்ஜுன் சொல்ல வெட்கமா பேராண்டி என்று சொல்லிவிட்டு அவன் கையை பிடித்து டேய் அர்ஜுன் உன் பையனோ பொண்ணோ நீ பன்னமாதிரி குரும்பு பன்ன அத பாத்துட்டுத்தான் நான் கண் மூடுவேன் என்று சொல்ல அப்படி சொல்லாதீங்க தாத்தா அப்பாவும் எங்கல விட்டுட்டு போய்ட்டரு நீங்கலும் போய்ட்டா எங்கலால தங்கமுடியாது என்றான் அர்ஜுன் .
தாத்தா நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க என்று சொல்லி விட்டு தன் ரூம்க்கு சென்ற கிருஷ்ணாவை பின் தொடர்ந்த மகாலக்ஷ்மி கிருஷ்ணா கொஞ்சம் நில்லு என்றார். என்ன அம்மா என்று அவன் கேட்க உனக்கு கல்யாணாம் பன்னலாம்னு இருக்க்கேன் என்றார். சற்று திகைப்புடன் அதை வெளிகாட்டாமல் என்ன அம்மா தீடீர்ன்னு என்று கேட்டான் இன்னும் எத்தன நாள் கல்யணாம் பன்னாம இருக்கிறது என்றார். அதற்கு அர்ஜுன் இன்னும் எனக்கு வயசு ஆகல அம்மா என்றான். இது உன் தாத்தாவோட ஆச டா. டாக்டர் அங்க்ள் என்ன சொன்னாருன்னு கேட்டதாணே அவரு மனசு கஸ்டப்படுறமாதிரி செய்யக்கூடாது என்றார்.
உனக்கு ஏதாவது பொண்ணு புடிசிருந்தா சொல்லு இல்லன்னா இந்த போட்டோவுல எந்த பொண்ணாவது புடிசிருந்தா சொல்லு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இரவு எல்லாம் அர்ஜுன் யோசித்துக்கொண்டே இருந்தான் . மறுநாள் காலையில் விடிந்ததும் குளித்து ரெடியாகி கீழே வந்தான்.அன்று வெள்ளிக்கிழமை என்பதால் மகாலக்ஷ்மி அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்றிருந்தார். கீழ் இறங்கி வந்த அர்ஜுன் வேகமாக காலை உணாவை சாப்பிட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான் .அவனது கார் நின்ற இடம் ஒரு கல்லூரி அப்போது தனது கைகடிகாரத்தை பார்த்துவிட்டு தனது கைப்பேசியை எடுத்து ஒரு என்னை டாயல் செய்தான் மறுமுனையில் வந்துட்டேன் என்று பதில் வர கைபேசியை அனைத்தான். அவன் கால் கட் செய்தப்பின் கொஞ்சம் நேரம் தாமதித்து ஒரு கார் அவன் அருகில் நின்றது அதிலிருந்து ஒரு 23 வயது மதிக்கத்தக்க பெண் கிழ் இறங்கி ஹாய் கிருஷ் என்று கட்டி அனைத்தாள்.
-தொடரும்