சுமை குறைக்க ஓர் சுமை - கயல்விழி

பொதி சுமக்கின்றேன்
கழுதையாக
அறிவு சுமையாம் புத்தகங்கள

அடிக்கடி பாடத்திட்ட
மாற்றத்தினால்
பாகம் ஒன்றில்
பணிரெண்டு புத்தங்கள்

படிப்பது மட்டும்
பனிரெண்டு
மொத்தமாய் இருபத்தைந்து

முதுகுமுள்ளு கொஞ்சம்
வளைந்தது
மூச்சி முட்டி முகமும்
வேர்த்தது

தூக்கி வீசி சுதாரிக்க
நினைக்கையில்
சுட்டெரிக்கும் வெயிலில் கல்லையும் மண்ணையும்
கழுத்தில் சுமக்கும் தந்தையின் முகம் தோன்றி மறைகின்றது

என்றோ ஓர் நாள் என் தந்தையின்
சுமை இறக்க இன்று நானும் சுமக்கின்றேன்

எம் வாழ்க்கை எம் கையில்
தந்தையின் மந்திரம்
இதுவே தான்

எங்களுக்கு எதுவுமில்லை
இனாமாய் கொடுக்க எவரும் இல்லை
இலவச கல்வித்திட்டம்
இலவசமாய் எதுவும் இல்லை

முறையிட்டால் முடிந்துவிடும்
கல்வி என்னும் செல்வம்
ஏழைகள் வாழ்வதனில்

எழுதியவர் : கயல்விழி (28-Nov-14, 11:43 am)
பார்வை : 643

மேலே