மகிழ்ச்சி தேடி
இரு வேளை உணவு
இறுதி வரை
குளிர் மறைக்கக் கூரை
குடி இருக்க
குடும்பம் குட்டி அவர்
குறை தீர்க்க
அரும்பில் இருந்தே நம்
அடி மனத்தில் புகுத்தி
மனம் மருங்கச் செய்தே
தினம் உழைக்க வைத்தே
கற்றது மறந்தது நிஜ
கல்வி என நினைந்து
உண்மை இதுவே என
உயர் முயற்சி கொண்டு
வலியும் வேதனையும்
பசியும் அவமானமும்
உழைப்பும் வியர்வையும்
நழுவிய வாய்புகளும்
விழுங்கிய மனக் கசப்பும்
இருப்ப வர்களின் ஏளனம்
இல்லா மையால் தாழ்மை
பேராசைக் காரர் சூழ்ச்சி
சதி காரர் சுரண்டல்
தோல்வி யால் கேலிகள்
இவை யாவும்.......
விடா முயற்சியின் வீரியத்தால்
திட நம்பிக்கை முயற்சியால்
வேதனை மெல்ல மறைய
வெற்றி உனை தீண்ட
உவகையின் உச்சத்தில்
உள்ளம் மகிழ்ச்சி வெள்ளத்தில்
உயரம் தொட்ட கணத்தில் - நீ
வந்த பாதை மறப்பாயோ.....?
பின் குறிப்பு:
"Pursuit of Happyness" என்ற ஆங்கில படத்தின் தாக்கம்,
இறுதி வரி எனது twist!