துளிப்பாக்கள்

"பேராபத்து அலைகள் நிறைந்த பகுதி"
எச்சரிக்கை பலகையை
அடித்து சென்றது அலைகள் !!!
‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡

வறுமையில் இருந்தார்கள்
வறுமையில் இறந்தார்கள்
ஒழிக்கப்பட்டதாய் வறுமை !!!
‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡

இடையிடையே எழுந்து சென்றவரெல்லாம்
உற்சாகமுடன் வந்தமர்ந்தார்கள்
உண்ணாவிரதப் போராட்டம் !!!
‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡

தலை சாய்த்திருக்கிறது
அவமானத்தில் இல்லை
தன்னடக்கத்தில் முற்றிய கதிர்கள் !!!
‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡

சாலைகள் பின்னோக்கி
வேகமாய் ஓடுகிறது
வாகனப் பயணம் !!!
‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡

எழுதியவர் : சொ.சாந்தி (28-Nov-14, 11:36 pm)
பார்வை : 114

மேலே