சற்றே பின்னோக்கி

வாழ்க்கை கடலில்
மூழ்கி கிடந்தது...
மூச்சு முட்டும் போது...
சற்றே தலை தூக்கி
பார்த்தேன்....
சந்தோசம் எங்கே என்று...

கண் முன்னே ஏதும் இல்லை...
நினைவுகள் மட்டும் பின்னோக்கி...

நுழைவு வாயில் தவிர்த்து ...
சுற்று சுவர் தாண்டி கல்லூரி
சென்ற சுகமான அந்த காலங்கள்....

விடிந்தும் தூங்கி...
தாமதமாய் வகுப்பு சென்று...
பேராசிரியர்களின் பெரும் வசைவை
சிரிப்போடு புறம் தள்ளி...
சீக்கிரமாய் விடுதி திரும்பிய
அந்த சந்தோசமான தினங்கள்...

நண்பனின் காதலுக்கு...
துறை தாண்டி தூது சென்று...
கை கட்டி நின்ற அந்த
தைரியமான நாட்கள்...

தேர்வென்றால் தெரிந்த நண்பனிடம்
கதை கேட்டு...
தெரியாத கேள்விக்கும் தெரிந்தது போல்
விடை எழுதி...
தோல்வி என்று நினைத்த பாடத்தில்
எல்லாம் வெற்றி பெற்று...
விடிய விடிய அதை கொண்டாடிய
அந்த தருணங்கள்....

நீ என்றல் நான்
நான் என்றல் நீ
என்று கவிதை பேசி..
கடைசி நாளில் திடீர்
நண்பர்களாய் மாறிய அந்த
காதலான நாட்கள்...

கடைசி நாளில் நண்பர்களை எல்லாம்
கட்டி பிடித்து...
கதறி அழுது...
நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே என்று
கூறி விடை பெற்று...
இது வரை நினைவில் இருக்கும் அந்த
கனவான காலங்கள்....

அங்கேதான் இருந்திருக்கிறது
சந்தோசம்....

வாழ்கையில் எவ்வளவு
உயரத்தில் இருந்தாலும்....
உங்களின் சந்தோசத்தை
தேடும் போது....

கனவாய்....
கற்பனையாய்....
கவிதையாய்...
கண்ணீராய்...

வந்து போகும்
உங்களின் !
கல்லூரி காலங்கள்.....

எழுதியவர் : வே.சரவணன் (29-Nov-14, 1:55 pm)
Tanglish : satre pinnoki
பார்வை : 98

மேலே