புத்துணர்ச்சி

ஆஹா ஆஹா
அபார சுகம்
அன்றாட விடியலின்
அழகு நிறம்
கண்ணுக்குள்
வாங்குங்கள்
விரல்நுனியில்
உரசுங்கள்
மனதிற்குள்
படம் பதித்து
பெருமூச்சை
உள்வாங்குங்கள்
நேற்றைய
மன உளைச்சல்கள்
கண்ணின் கீழ்
கருவளையங்கள்
எல்லாம் மறைந்து
முகம் மலருங்கள்
வாழ்கையின்
இரு தத்துவங்கள்
இந்த காட்சியில்
உணருங்கள்
நன்மை தீமையோ
எதுவும் நம்மை
கடந்து போகும்
சந்திர சூரியர்கள்
கூட நிதமும்
மறைந்து மறுதினம்
புதிதாய் வருவர்
நமக்கெல்லாம்
அனுதினமும்
புத்தம் புதிதாய்
பிறப்பு வாழ்ந்து பாருங்கள்

எழுதியவர் : கார்முகில் (1-Dec-14, 7:09 pm)
Tanglish : puthunarchi
பார்வை : 530

மேலே