தேவதையின் மறுபக்கம் - யாழ்மொழி
முதல் முதல் சந்திப்பிலே
முழுவதுமாய் ஆட்கொண்டாள்
பத்துவருட காலம் என்னை
பாசத்தோடு பாராட்டினாள்
முதல்முறை வகுப்பினுள்ளே
முழித்தபடி நானிருந்தேன்
புதியவள் என்றெண்ணாமல் - அந்த
புனிதவதி புன்னகைத்தாள்
இடப்பக்கம் கைகாட்டி
இருக்கையிலே இடம்கொடுத்தாள்
அன்றுமுதல் ஒருவருக்கொருவர்
இடபக்க இதயமானோம்
அன்பில் ஓர் அன்னையவள்
ஆருயிர் தோழியவள்
சின்னதொரு சிணுங்களில் - என்
சஞ்சலங்கள் அறிந்திடுவாள்
வார்த்தைக்குள் அடங்காத
வாழ்வன்றோ வாழ்ந்துவந்தோம்
வசந்தகால பறவைகளாய் - வாழ்வெனும்
வானத்தில் பறந்துவந்தோம்
பருந்தொன்று வருமென்று
அறிந்திடவில்லை - அந்த
பைங்கிளியை கசக்குமென்று
நினைத்திடவில்லை
தேளொன்று தெய்வம்போல
தரிசன மளிக்க - என்
தேவதையின் கரிசனங்கள்
தடம் மாறிற்று..........
(தொடரும்)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
