காட்டு தேவதையா கல்லறை தேவதையா

அவள் ஒரு காட்டு தேவதை
சொன்னது காட்டுப் பறவை
அவளைப் பார்க்க ஆசை
தொற்றிக் கொள்ள
பறவை சொன்ன வழி கேட்டு
நடந்தேன்

இறுதியில் வந்தது அடர்ந்த
காடு அழகான காடு
எங்கிருந்தோ ஒரு மங்கையின்
யாழினும் இனிய பாட்டுக் குரல்
குரல் வந்த திசை நோக்கி
நடந்தேன் . அவளை கண்டேன்

அலை போன்ற கூந்தல்
பிறை போன்ற நெற்றி
கயல் போன்ற கண்கள்
ஆப்பிள் போன்ற கன்னம்
சிகரம் போன்ற மூக்கு
பூ இதழ் போன்ற உதடு
உடம்போ கடற் கன்னி
உண்மையில் அவள் தேவதை
தான் காட்டு தேவதை தான்

அவள் பாடுகிறாள்
பறவைகள் இசைக்கிறது
அவள் மேல் குயிலுக்கு
பொறாமை வராதா ?
அவள் ஆடுகிறாள்
மிருகங்கள் வியக்கிறது
அவள் மேல் மயிலுக்கு
பொறாமை வராதா ?
அவள் குளிக்கிறாள்
நதியில் தண்ணீர்
விரண்டோடி வருகிறது
அவள் மேல் மீனுக்கு
பொறாமை வராதா ?

இரவும் வந்தது
உண்மையான நிலவை கண்டேன்
வானில் இல்லை பூமியில்
பகலில் பூக்கும் பூக்கள் கூட
அவள் தொட இரவில் மலர்வதை
கண்டேன் . மின்மினிபூச்சிகள்
வழி காட்ட அவள் பஞ்சு
போன்ற கால்கள் பின் தொடர்வதை
கண்டேன்

நானும் தொடர்ந்தேன்
அவள் நின்றாள் நானும் நின்றேன்
அவ்விடத்தில் படுத்தாள்
கண்ணிமைக்கும் நொடியில்
மறைந்தாள்

சுதாரித்துக் கொண்டு
சுற்றும் முற்றும் பார்த்தேன்
நான் இருப்பது மயானத்தில்
அவள் படுத்தது கல்லறையில் ...

எழுதியவர் : fasrina (3-Dec-14, 11:54 am)
பார்வை : 217

மேலே