கண்களும் பார்வையும்

ஒருவர் மனதை ஒருவர்
அறிய உதவுவது கண்கள்
அதுவே அவர்களின்
உள்ளத்தின் நோட்டங்களை
தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டி விடும்
உள்ளம் ஊமை போன்றது
கண்களோ துடுக்குத் தனம் மிக்கது
குழந்தைப பருவத்தில் தெய்வீகப் பார்வை
துள்ளி விளையாடும் சிறு பருவத்தில்
குறு குறு பார்வையும்
இளமை கொள்ளும் வாலிப பருவத்தில்
கவாச்சி கொள்ளும் பார்வையும்
முதுமைப் பருவத்தில்
கருணை உள்ள பார்வையும் கொண்டு
மனிதனை முழு மனிதனாக்குவது
நம் அழகிய கண்களும் பார்வையும்
உடலின் ஒளி நம் கண்களே
பார்வைகள் ஆயிரம் கதைகள் சொல்லும்
பண்பு பாசம் நேசம் அன்பு நேர்மை கருணை கவர்ச்சி
யாவும் கண்களில் தெரியும் உண்மைகள்
நம் கண்கள் காணும் தோற்றங்கள் கணக்கில்லாதவை
கடவுள் கொடுத்த அருள் கொடை
அழகிய உடலில் அற்புதமான கண்கள்
அதில் நம் நலன் முழுவதும் அடங்கும்
ஆகவே பார்வைகள் துல்லியமாகவும் தூய்மையாகவும்
அமைய அமைக்க நம்மால் மட்டுமே முடியும்
காப்போம் கண்களை காண்போம் நன்மைகளை

எழுதியவர் : பாத்திமா மலர் (3-Dec-14, 2:19 pm)
Tanglish : kangalum parvaium
பார்வை : 84

மேலே