காதல் எது காமம் எது

கண் கண்டதும் தோனுவது காதல்
கண் நோக்கியதும் கை நீட்டுவது காமம்
கண்ணாலே இடை போடுவது காதல்
கண்ணை மூக்கைப் பார்த்து இடை மேல்
கைபோடுவது காமம்.....

தாலி கட்டியவளை அணைப்பது காதல்
தாரம் அல்லாத ஒருத்தியை அழைப்பது காமம்
தரம் பார்த்து இடம் பார்த்து நாகரீகமாக கூறுவது காதல்
தரம் இடம் பாராமல் அநாகரீகமாய் நடப்பது காமம்.....

ஒருவனுக்கு ஒருத்தி என்று நினைப்பது காதல்
ஒருவன் பலருடன் உறவு கொள்வது காமம்
ஆடவனை தன் கைபிடியிலே வைத்துக்கொள்வது காதல்
ஆடவனை வலை வீசி வளைப்பது காமம்.....

துடிப்பான வயது இருந்து தளரும் வயதிலும் இருப்பது காதல்
துள்ளும் வயதினிலே பல உள்ளம் நாடுவது காமம்.....

உள்ளத்தில் அமைதியும் இல்லத்தில் இன்பமும் கொடுப்பது காதல்
உள்ளம் தடுமாற்றமும் உடலுக்கு கேடும் கொடுப்பது காமம்....

இணைந்த உறவை உயிர் உள்ளவரை மதித்து ஒன்றாகவாழ்வது காதல்
இன்று ஒரு வீடு நாளை ஒரு கட்டில் என்று வாழ்வது காமம்....

உடல் இணைந்து உரிமை கொடுத்து உயிரைப் பெருக்குவதுகாதல்
உடலுக்கு இன்பம் கொடுத்து உள்ளத்தை மூடியே வைத்துவிட்டுப் பிரிவது காமம்...

கூடலிலும் ஊடலிலும் சமபங்கு வகிப்பது காதல்
கூடல் முடிந்ததும் உதறி விட்டுப் போவது காமம்...../

காதல் மறைந்து வருகின்றது காமம் வளர்ந்து
வருகின்றது இவை தவறு என்று உணர்த்த
காலம் கொடுத்த தண்டனை உயிர்க் கொல்லி நோய்...

காலம் உணர்ந்தும் காதலின் பெருமையை
காலம் கடந்த ஞானம் காமத்தால் கண்ட கோலம்......

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (5-Dec-14, 8:15 pm)
பார்வை : 319

மேலே