காலச்சுழற்சி-ரகு

"கெழவனுக்குப் போதாக்காலம்
உசிர்கெடந்தின்னும் துடிச்சுக்கெடக்கு"

மகனின்
வசைவாங்கிப்போனக் காற்று-பின்
திரும்பி வந்தது
தந்தையின் மரணச்செய்தியோடு

நீள்காத்திருப்பு
நிறைவுற்ற மகிழ்ச்சியில்
புருவமுயர்த்தி
போலியாய்க் கண்நீர்த்தான் அவன்!

கீழ்நோக்கி
மேலும் மேலும்
வேர் புதைந்துபோவது
கிளைவளர்வதற்காகவே

என்னும்
தத்துவச்சொற்கள்
தூக்கியெறிந்தவனாய்
புறப்பட்டுப்போனவன்

பெரியவரை
இடித்துத்தள்ளிய
வாகனஓட்டியிடம்
நஷ்டஈடுகேட்டான்
நலிந்தகுரலில்

நல்லவிலை கிடைத்த
மறுநொடி
அவனின் அலைபேசி
அலறியது

மறுமுனையில்........
"நீ அப்பாவாகிவிட்டாய்"!

எழுதியவர் : அ.ரகு (5-Dec-14, 8:16 pm)
சேர்த்தது : சுஜய் ரகு
பார்வை : 69

மேலே