ஒரு நாள்
உணவுக்கும், உயிருக்கும் போராடும்
மக்கள் வாழும் உலகில்
பணத்திற்கும், பதவிக்கும், பாலுறவிற்கும்
போராடும் மூடர்களே,
ஒரு நாள்
உணவுக்கும், உயிருக்கும்
போராடி பாருங்கள் !
உயிர் பிரியும் வரை,
அந்நாள் உள்ளத்தில்
உறுத்திக்கொண்டே இருக்கும் !