உன் வருகை
இதுவரை,
இந்த தெரு இவ்வளவு ரம்மியமாய் இருந்ததில்லை..
எறும்புகள் வேலை நிறுத்தம் செய்ததில்லை...
பறவைகள் சிறகடிக்க மறந்ததில்லை..
மொட்டுகள் மலரத் தவறியதில்லை...
கணவன்மார்கள் அகம் குளிர்ந்ததில்லை..
மனைவிமார்கள் வயிறெரிந்ததில்லை...
இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க,
அவசர சட்டமும் அருகில் இல்லை...
இப்பாவி மனம் மட்டும் விதிவிலக்கா?
மனமென்ற கல் அகலிகனாக மாறியதே இல்லை...
நீ தெருவில் கால் பதிக்கும் வரை...

