என் காதல் மாறாது

விதி என்று சொல்லி
விரும்பாத சோகம்!
திரும்பாத மகிழ்ச்சி!
திணறவிடும் இகழ்ச்சி!
இது போதும் பெண்ணே! இப்போதைக்கு!
சரியான தண்டனைதான்
இப் போதைக்கு!!
காதல் என்ற சொல்லே
காணவில்லை என்று!
தேடிப்போகும் முன்பு
தேய்ந்து போகும் அன்பு!
உணரவில்லையா.?
உள்ளம் திணறவில்லையா.?
மாய்ந்து போனபின்னும்
ஓய்ந்து போகவில்லை!
நைந்துபோன காதல்!
என நொந்து சாகிறது
நீ விட்டதால் நீர் விடும் கண்கள்!!
என் கண்ணீரில் நனையும்
எரிமலையும் அணையும்!
நினைக்காதோ உன்னுள்ளம்
ஓர் நாளில் எனையும்........சக்தி