உன் பார்வையும் உன் முத்தமும்

உன் பார்வையும் உன் முத்தமும்
=============================

பிழை நான் ,அழகான பிழை
தாண்டிப்போகும் நாட்கள் மறந்து
வருமான வரிபோல
வயதையும் ஆசையையும்
கள்ளக்கணக்கிட்டுக்கொண்டிருக்கிறது
சிரியும் தோற்றமும் ,,
அடுப்பம் வா என்றால்
கால அட்டவணை அணையிட்டு
உறங்கு என்றவள் போய்விட்டாய்

எத்தனையோ தடைப்போட்டும்ம்
விடுவதாய் இல்லை
எனை நெருங்கிக்கொண்டிருக்கும்
அவ்வுறக்கச்சோம்பன்
திறவுகோலை துலக்கிக்கொண்டிருக்கிறேன்
எத்தனையோ முத்தங்களை
எளிதில் கடந்துவிட்டேன்
ஆனால்
உனைக்கண்டாலே
நடுக்கங்கொண்டு தெறித்தோடும்
என் ஆவல்களை
சந்திக்கக் கொதிகொள்கிறது
உன் பார்வையும் உன் முத்தமும்

என் கோபத்திற்கு அணைப்போடும்
உன் அணைப்பின் அடர்த்தி
இன்றெல்லாம்,,
மெது மெதுவாய்த் தளர்ச்சியுறுகிறது
எனக்கு தெரயொயவில்லை,,
காரணம் நீயானால்,,
விலகும் விடையும் நீயாவாய் ,,

எனைவிட்டு நீ தூரமாகின்ற அக்காட்சியை ,,
போய் மறையும்வரையாவது
இறந்துவிடாமல்
பார்த்துகொண்டிருக்கும்
சகிப்புத்தன்மையுடன் மட்டும்தான் இன்று நான்
பிறழ்ச்சியினால் கூட
திரும்பிவிடாதே
நீர்வற்றிச்சிவந்த என் குளக்கண்களும்
சுரத்தலின் காலாவதியால்
உமிழ்நீர் அள்ளாத உலர்ந்த என் நாவும்,,
யார் யாரிடமோ இருந்து
இரவலம் வாங்கிய இதழ் விரிசலும்
உனக்குப் பரிதாபத்தைக்கொடுத்துவிடலாம்,,, ஆம்
ஆதலினால்
என் கண்களில் நின்று மறையும்
அந்த முதல் வளைவின் இறுதிவரையிலாவது
ஒளிக்குன்றிய என் பார்வை
சற்றும் திரும்பிப்பார்க்காமல் செல்லும் உன் மீது ,,,,
நீண்டிருக்கட்டுமே

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (10-Dec-14, 2:45 pm)
பார்வை : 144

மேலே