பெண்ணை மதியுங்கள்

மனதிற்குள் ஒன்று
வெளியிலே இன்னொன்று
அகத்தின் அழகு முகத்தில்
தெரியுமாமே !
பழமொழி பெண்ணுக்கு
பொருத்தமில்லை

பல சோகங்கள் பெண்ணின்
அகத்தினுள் எல்லாம் மறைத்து
அழகான புன்னகை
பல கஷ்டங்கள் பெண்ணின்
வாழ்வில் எல்லாம் மறைத்து
நிம்மதியான புன்னகை

சிறு வயதில் குழந்தையாய் இருந்து
பெற்றோரை மகிழ்வூட்டுகிறாள்
இளவயதில் கன்னியாய் இருந்து
பெற்றோருக்கு கண்ணியம் சேர்க்கிறாள்
திருமண வயதில் மணமுடித்து
கணவனை திருப்திப்படுத்துகிறாள்

பின் தாயாகி பெற்ற பிள்ளையை
ஆளாக்கி சமூகத்திற்கு
நட்பிரஜையை கொடுக்கிறாள்
முதியவயதில் தன பிள்ளைக்கு
பெருமை சேர்க்கிறாள்

"பெண்ணென்று பூமிதனில் பிறந்து
விட்டால் மிகப் பிழை இருக்குதடி
தங்கமே தங்கம் " பாடிச்
சென்றார் பாரதியார்

நான் சொல்வேன் பெண்ணென்று
பூமிதனில் பிறந்து விட்டால் மிக
உயர்விருக்குதடி தங்கமே தங்கம்

பெண்ணை மதியுங்கள்
உங்கள் தாயை போல்
பெண்ணை மதியுங்கள்
உங்கள் சகோதரி போல்
பெண்ணை மதியுங்கள்
உங்கள் மனைவி போல்
உங்களை மதிக்கும்
பெண்ணின் உலகம்

எழுதியவர் : fasrina (11-Dec-14, 9:43 am)
Tanglish : pennai mathiyungal
பார்வை : 132

மேலே