கரிசல் காட்டுக் கவிதை

செங்காட்டுப் புழுதிக்குள்ள சாஞ்சாடும் பயிரப்போல
முத்தான உம்மனசுக்குள்ள முழுசாக தொலைஞ்சேன் புள்ள...
பூங்காத்து வீசுகிற ஆத்தோரமா நானும் வாரேன்
பூப்போட்ட தாவணியோட நீயும் வந்து தரிசனம் தாயேன்...
எங்காத்தா இடிச்சு வச்ச பச்சரிசி மாவப்போல
வெண்ணிலவ தொக்கடிச்சு நிக்குது உன் முகம்தானடி...
கருப்புசாமி சிலையப்போல கம்பீரமா நானும் நின்னேன்
சிறுக்கி நீயும் சிரிச்சுப்போக சருகாக சரிஞ்சே போனேன்...
களவு இல்லா ஊருக்குள்ள காவல்காரன் நான்தானடி
ஒத்த வார்த்த நீயும் சொன்னா காதல் காரன் ஆவேனடி...!!!

எழுதியவர் : சதீஷ் தமிழன் (11-Dec-14, 11:23 am)
சேர்த்தது : சதீஷ் தமிழன்
பார்வை : 107

மேலே