அன்பே நீ வந்தபோது -9-முல்லைக் கொடியே கேள்
உன்னுடைய நளினங்களின்
தயவில்லாமால்
நான் பாடும் பாட்டெல்லாம்
ராகத்தோடு சேர்வது
வீணே!
இந்த ஏவாளுக்கு
ஆடையே ஜாடைதான்!
உன்னப் பார்த்த
என் கடல்கவிதை
சேர்ந்துகொண்டே இருக்கிறது
ஒருபக்கம் இன்பமழை
பேய்ந்துகொண்டே இருக்கிறது!
என் இதயத்திற்கு
காதல்குழந்தை பிறந்து
ஆண்டுகள் பலவாகிவிட்டன
உன்னை அழைக்கிறேன்
பெயர் வைக்க அல்ல
உயிர் கொடுக்க!
என்னைப்போல் காதலித்தவனுக்கு
ஒரேஒரு வழிதான் உண்டு
அது காதலி போகிற
வழிதான் என்று!
உன் இதயம்
ஒசைபடமால் உச்சரிக்கும்
அது என் உயிரை
கத்தரிக்கும்!
ஆகாயித்திற்குமேல் பறந்த
என் அழகான பறவையே
என் எண்ணத்துவாரத்தில்
எப்போது நீ எச்சமிட்டாய்
எனக்குத் தெரியாமல்!
இப்போது
நம் காதல் விருட்சம்
என் இதயச்சுவரை
இடித்துவிட்டல்லவா
எழுகிறது!
நீ நிழல் கொடுப்பாயா
என்று நினைத்திருந்தேன்
அதற்குள் ஊஞ்சல் கட்டி
என்னை
உட்கார வைத்துவிட்டாய்!
சிட்டுக் குருவியே
நீ என்னை
சிறை வைத்துவிட்டாய்
இனி உன் கூரையே
என் ஆகாயம்!
என் மனப்புத்தகத்தில்
மயிலறகு ஒன்றை
மறைத்து வைத்துள்ளேன்
அது நீதான்!
காதல் என்பது
நோயானால்
உன் கண்களே
என் பாயாகும்!
நீயும் நானும்
கை பிடித்தபடி
தள்ளாடி நடப்போமா
காதலுக்குத்தான்
கண் இல்லையே!
காதல்வலையில்
சிக்கிக்கொண்டால்
கவலை என்ன
அதோடு பறந்து
ஆகாயத்திற்கு செல்வோம்!
பாரி கொடுத்த
அந்தத் தேரில்
முல்லைக் கோடி
பற்றிப் படர்ந்ததே
அதைப்
புரிந்து கொள்வாயா காதலி!