நீலக்குயில் தேசம்12---ப்ரியா

கயலின் ஜாதகத்தைக்கொண்டுபோய் பார்த்து அந்த கனவு பற்றியும் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த தாத்தாவால் நிம்மதியாக இருக்க முடியவில்லை காரணம் அந்த சாமியார் சொன்ன விஷயங்கள் அப்படி..........தன் மருமகளிடம் சொல்லவா?வேண்டாமா? என்ற யோசனையில் மூழ்கியிருந்தவரை "மாமா" என்றழைத்த சுசீலாவின் குரல் கலைத்தது......ம்.....வாமா உட்காரு பள்ளிக்கூடம் முடிந்துவிட்டதா?என்று கேட்டார்..?

ஆமாம் மாமா.....இன்னிக்கு கயலின் ஜாதகத்தை அந்த சாமியார்க்கிட்ட கொண்டு போனீங்களே அவங்க என்ன சொன்னாங்க?ஏன் சோர்வாக இருக்கீங்க ஏதாவது பிரச்சனையா?என்றாள்.

அப்படி ஒன்றும் இல்லையம்மா அந்த சாமியார் சொன்னது கொஞ்சம் கஷ்டம்தான்......சொல்லணுமா வேணாமான்னு யோசிச்சிட்டிருந்தேன் இனி வழி இல்லை சொல்கிறேன் என்று சொல்ல ஆரம்பித்தார்........

நம்ம கயல் ஜாதகத்தை பார்த்தவர் எவ்வளவோ நேரம் ஆய்ந்து குறிப்புகளையெல்லாம் நோக்கி சுமார் 4மணிநேரம் கழித்து பதில் சொல்லியிருக்கிறார்மா......முதலில் ஜாதகத்தைப்பார்த்தவர் இந்த பெண்ணின் ஜாதகப்படி அப்பா சிறுவயதில் இறந்திருப்பார் 15வயதில் பெரியவள் ஆகி சரியாக 10 வருடங்கள் கழித்து 25 வயதில் திருமணம் என்றும் சொன்னார்........

இதுல என்ன வருத்தம் மாமா எல்லாம் நல்ல படியாதானே நடந்திருக்குது அப்புறம் உங்களுக்கு என்ன ஆச்சி என்றாள் சுசி...?

பிள்ளைக்கு தினமும் வரும் கனவைப்பற்றிக்கேட்டேன் அப்படியே அவர் அதிர்ந்து போயிட்டார்........இந்த வயதில் இப்படி கனவு வந்தால் அதுக்கு காரணம் வேறு என்று சொன்னவர் அதற்கான விளக்கமும் தந்தார்.......நம்ம கயலுக்கு வரக்கூடியது போன்ற கனவு பொதுவா யாருக்கும் வர வாய்ப்பில்லையாம் முன் ஜென்மத்துல அரசக்குடும்பத்துலயோ, தேவர்களால் ஆசிர்வதிக்கபட்டு பிறந்திருந்தாலோ,முன் ஜென்மத்தில் ஏதாவது ஆசைகள் நிறைவேறாமல் இறந்திருந்தாலும் அது இந்த ஜென்மத்தில் பிறந்தவர்களுக்கு நினைவில் இருக்குமாம், சிலருக்கு மனதிலேயே அந்த நிகழ்வு பதிந்து குடைச்சல் கொடுத்துவிட்டு இருக்குமாம் ஒரு சிலருக்கு இதே போல் கனவில் தினம் தினம் வந்து நிஜத்தில் நடப்பதைப்போல் உணர்வு ஏற்படுமாம்.......இந்த மாதிரி ஏதாவது முன் ஜென்மத்தில் கயலுக்கு நிகழ்ந்திருந்தால் நிச்சயம் இந்த கனவில் நடக்கிறது அவளுக்கு உண்மையில் நடக்குமாம் இல்லையெனில் அது சும்மா வந்து விட்டு மறைந்து விடுமாம்.......கயல் கனவில் வரும் நிகழ்வு உண்மையா?இல்லை சாதாரணதா என்பது 25ஆவது வயதில்தான் நாம் அறிய முடியுமாம் அதுவரை அவளது போக்கில் அவளை விடுவதே சிறந்தது என்றும் அவளை இப்பொழுது ஒருமுறை அவரிடம் அழைத்து செல்லவேண்டும் என்றும் சாமியார் சொன்னதாக தாத்தா சொல்லிமுடுடித்தார்.............

கவலையாய் நடந்ததை கேட்டுக்கொண்டிருந்தவள் "தெய்வமே இது என்ன வேதனை எங்கள் குடும்பத்திற்கு அப்படி என்ன கொடுமைதான் நடந்திருக்கும் என் பிள்ளைக்கு ஒரு வழி சொல்லும்" என்று கடவுளிடம் பாரத்தை போட்டாள் சுசீலா.

வருத்தம் வேண்டாம் அம்மா ஒருமுறை கயலை அங்கு அழைத்து சென்றால் எல்லாம் ஸ்ரீ ஆகிவிடும் என்று தாத்தா நம்பிக்கைக்கொடுத்தார்.

தன் மாமனாரின் பேச்சில் கொஞ்சம் மனதிருப்தியுடன் காணப்பட்டாள் சுசீலா..

அரவிந்த் ராஜலெட்சுமி குடியிருந்த பழைய வீட்டிற்கு பக்கத்திலுள்ள ஒருவரிடமிருந்து அவர்கள் புது முகவரியை வாங்கிவிட்டு கிளம்பினான் அந்த முகவரி கொடைக்கானல் பக்கம் என்பதால் இவனுக்கு கொஞ்சம் எளிதாக செல்ல முடிந்தது ஆனால் உள் ஏரியா என்பதால அவர்கள் ஊரையும் வீடையும் கண்டுபுடிப்பது கடினமாக இருந்தது......... 2மனிநேரத்தேடலுக்குப்பின் நொந்து நூடில்ஸ் ஆகி ஒரு வாசலின் முன் போய் அமர்ந்தான் களைப்பிலிருந்தவன் அவனையறிமால் கண்ணயர்ந்துவிட்டான்...என்ன ஆச்சின்னு தெரில திடீரென பதற்றமாய் எந்திரித்தவன் கண்களில் பட்டு மின்னலாய் பறந்து போனாள் அந்த பெண் ஆம் அவள்தான் நம்ம கயலை ஒத்த ப்ரியதர்ஷினி அவள் இன்னொரு பொண்ணையும் பின்னிருக்கையில் வைத்துக்கொண்டு ஒரு பிங்கலர் ஸ்கூட்டியில் மின்னல் வேகத்தில் போய்க்கொண்டிருந்தாள்...இவளை எப்படி பின் தொடர்வது ஒருவேளை அவள் வீட்டுக்குத்தான் போறாளா? இல்லை கூட இருக்கும் பெண்ணின் வீட்டிற்கா? அதுவுமில்லாமல் வேறெங்காவது வெளி இடத்திற்கு சுற்றுகிறார்களா?என்று புரியாமல் அவள் சென்ற திசையை நோக்கினான்......அதற்குள் அந்த பெண் கைகாலில் அடிப்பட்டு முகத்தில் உராய்ந்து ரத்தக்கசிவுடன் சரியாய் நடக்க முடியாமல் வேதனையால் துடிதுடித்து கஷ்டப்பட்டு முடியாமல் ஓடி வந்துகொண்டிருந்தாள் இவன் நின்ற திசையை நோக்கி அவளை பிந்தொடர்ந்து 3பேர் விரட்டினர் அதற்குள் அவளது தோழி அதே ஸ்கூட்டியில் வேகமாய் அந்த மூன்று பேரையும் கடந்து இவளருகில் வந்து இவளை வண்டியில் ஏற சொல்லி விட்டு இருவரும் மறுபடியும் வேகமாய் இவனைவிட்டுக்கடந்தனர்.......

வேறு வளியே இல்லை என மனதிற்குள் நினைத்தவன் அவ்ர்கள் சென்ற திசையை நோக்கி அந்த மூன்று பேரில் இவனும் ஒருவனாய் துரத்தினான்.............அவர்கள் துரத்துவது எதற்கு? என்று இவன் அறியவில்லை....?இவன் தேடல் ஒன்றை மட்டும் மனதிற்குள் நினைத்துக்கொண்டு இன்னும் வேகமெடுத்தோடினான்...அரவிந்த்..... ??????

மாலையில் வீட்டிற்கு வந்த கயலிடம் யாரும் எதுவும் பேசவில்லை அதாவது அந்த ஜாதக விஷயம் ஆனால் கயல் அவர்களை பார்த்ததுமே என்னவோ நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள் ஆனால் எதுவும் கேட்கவில்லை.......அம்மா ரொம்ப தலைவலிக்குது கொஞ்சநேரம் தூங்குறேன் 1 மணிநேரம் கழித்து எழுப்புங்கள் என்று சொல்லிவிட்டு தனதறைக்குள் சென்று கட்டிலில் சரிந்தவளுக்கு.........தோழிகள் சொன்னதும் ராகேஷ் நினைவும் வதைத்துக்கொண்டிருந்தது.

இப்பொழுது இவள் முடிவெடுக்க ஆரம்பித்தாள் தோழிகள் சொல்வது மிக மிக சரியே......ராகேஷ் தான் நமக்கு சரியானவன் அவன் கண்களில் முதல் நாளே காதலை கண்டதும் முன் ஜென்மத்துல பழகியது போன்ற உணர்வும் ஏற்பட்டதை நன்கு உணர்ந்திருந்தாள் கயல்....... நம் கனவுக்காதலன் ராகேஷ் தான் என மனதிற்குள் அழுத்தமாய் சொல்லிக்கொண்டாள் இவனே தான் அவன் என்று முழுவதும் நம்பினாள் நம்பிவிட்டாள் தன் மனது முழுவதும் ராகேஷை வைத்துக்கொண்டு புது கனவு தேசத்திற்குள் புகுந்தாள் கயல்...........அந்த கனவில் பழையது போல் அதே தேஷம் வந்தது ஆனால் இப்பொழுது அவன் முகத்தை இவள் பக்கம் காட்டிக்கொண்டிருந்தான் மார்பில் இப்பொழுதும் கயல்விழியாள் என்று எழுதியிருந்தது பக்கத்தில் போய் நிமிர்ந்து பார்த்தாள்..........ராகேஷின் முகம் தெரிந்தது...........!


தொடரும்........

எழுதியவர் : ப்ரியா (12-Dec-14, 3:27 pm)
பார்வை : 219
மேலே