நாகரிகம்

மாப்ளப் பையன் பொண்ணவிட 4 வருஷம் மூத்தவருங்க. இருந்தாலும் எங்க பொண்ணக் கல்யாணம் பண்ணிட்டதுக்கு பின்னாடி அவரு இந்தக் காலத்து நாகரிகத்துப்படி தான் எங்க பொண்ணுகிட்ட நடந்துக்கணும்.

நீங்க என்ன சொல்றீங்கீங்ன்னே புரியலீங்க.

எங்க பொண்ண வாம்மா, போம்மான்னு இல்லனனா அவ பேரச் சொல்லித்தான் கூப்பிடணும். அவ உங்க பையனை வாடா போடான்னு இல்லன்னா அவரு பேரச் சொல்லித்தாங் கூப்பிடுவா. பையன் எந்தக் காரணத்தக் கொண்டும் எங்க பொண்ண வாடி போடின்னு சொல்லி அவமானப்படுத்தக் கூடாதுங்க.

அய்யோ இதெல்லாம் நாகரிகம்ன்னு எங்களுக்குத் தெரியுமுங்க. உங்க பொண்ணு அவன அடிச்சாக்கூட அவன் திருப்பி அடிக்கமாட்டானுங்க.

ரொம்ப சந்த்தோஷமுங்க. இப்படிப்பட்ட மாப்ளையைத் தான் நாங்க வலை வீசித் தேடிட்டிருந்தமுங்க.

எழுதியவர் : மலர் (12-Dec-14, 11:24 pm)
Tanglish : nagarigam
பார்வை : 190

மேலே