விற்றவையும் பெற்றவையும்

உழுத மாட்டுக்கு
தெரியாமலும்
போகலாம்
ஆழம் விழுந்த
ஆல விழுதை
அறுத்தெறிந்து விட்டதை ......

விற்ற உழவனுக்கு
தெரியாமலும் போகலாம்
உழுதே செத்துப் போன
மாட்டின் நுரைத் துகள்கள்
மண்ணோடு புதைந்து போன
மதிய நேரங்களை.......

கை மாறிய
காட்டுக்கு தெரியாமலும்
போகலாம்....
விற்றவன் மனதுக்குள்
செத்துப் போன மாட்டின்
வலிகளும்
தன்னுடைய பழிகளும்.......

கவிஜி

எழுதியவர் : கவிஜி (13-Dec-14, 1:16 pm)
பார்வை : 113

மேலே