தயக்கம் வேண்டாமடி

பெண்ணே இன்னும் என்ன
தயக்கம்
வீட்டுக்குள் வாழ்ந்தது போதும்
உலகிற்கு முகம் காட்டு

பெண்ணே இன்னும் என்ன
தயக்கம்
சாதித் தடையா ?
வீட்டுக்குள் வாழ்ந்தது போதும்
உலகிற்கு முகம் காட்டு
நெஞ்சை நிமிர்த்தி சொல்
எனக்கு சிவப்பு உதிரம் என்று

பெண்ணே இன்னும் என்ன
தயக்கம்
விதவைக் கோலமா ?
வீட்டுக்குள் வாழ்ந்தது போதும்
உலகிற்கு முகம் காட்டு
நெஞ்சை நிமிர்த்தி சொல்
நானும் பெண் தான் என்று

பெண்ணே இன்னும் என்ன
தயக்கம்
ஏழையா ?
வீட்டுக்குள் வாழ்ந்தது போதும்
உலகிற்கு முகம் காட்டு
நெஞ்சை நிமிர்த்தி சொல்
முயற்சியில் உயர்வேன் என்று

தயக்கங்கள் உடைத்தெறி
வீட்டுக் கதவை தாண்டு
பரந்த உலகை காணு
சாதியும் ஏழ்மையும்
விதவை கோலமும் முன்னேற
தடையல்ல என உணரு

நீ உணர்ந்தால்
நீயும் கல்பனா சவ்லா தான்
நீயும் அவ்வையார் தான்
நீயும் அன்னை தெரேசா தான்
நீயும் எலிசபத் தான்
நீயும் சிறிமாவோ தான்

எழுதியவர் : fasrina (13-Dec-14, 1:39 pm)
பார்வை : 98

மேலே