காதலி நினைவும் - கவிதை மழையும்

பட்டாம் பூச்சியை
பிடிப்பது போல் - என்
பார்வை பிடித்தது அந்த
இலை நுனி மழைத்துளியை........

பக்கத்தில் வந்தது
காதலி நினைவு - நான்
பறக்க விட்டேன் அந்தப்
பட்டாம் பூச்சியை .....

மலரில் அமர்ந்ததா அது ?

இல்லை இல்லை
மறுபடி ரசித்தேன் - அது

அவள் கன்னத்தில் ஈரம்.....!!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (14-Dec-14, 2:05 pm)
பார்வை : 133

மேலே