மெளனமாய் ஒரு பூகம்பம்-5 - சந்தோஷ்

மெளனமாய் ஒரு பூகம்பம் -இறுதிபாகம்
-----------------------------------------------------------------------

அந்த நூலகத்தில் வாசுதேவன் - கற்பனா இருவருக்குள்ளும் இரண்டு நிமிடங்களுக்கு மேற்பட்டு நீடிக்கிறது விழி வழியாக காதல் அறிமுகம்..!

மெளனமாய் பரிமாறிக்கொண்டிருக்கும் பார்வையில் காதல் பூகம்பத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் நேரம் இது....!

தீடிரென நூலகம் அதிர்ந்ததாய் உணர்ந்தன அங்கிருந்த பறவைகள். வாசுதேவன். இன்னும் தமக்கு நிச்சயிக்கப்படாத காதலியாம் கற்பனாவின் பார்வை இடியில் இதயம் அதிர்ந்ததோ எனவும் சுயபரிசோதனை செய்துக்கொண்டவனாய்...எதேச்சையாக நூலகத்தின் சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் பெண்டுலம் பொருத்தப்பட்ட சிலந்தி நூல்களால் அலங்கரிக்கப்பட்ட ராட்சத கடிகாரகத்தை உற்று நோக்கியவனுக்கு அதிர்ச்சி...!

கடிகாரத்தின் சிறுமுள் 12 எண்ணில்..! பெருமுள் இன்னும் இருநிமிட இடைவெளியில் சிறுமுள்ளுடன் ஒன்றுகூடி . புதிய வருடத்தை பிரசவிக்க காத்துக்கொண்டிருந்தது.

வாசுதேவனின் பார்வை நூலகத்தின் சாளரத்தை நோக்கியது. சாளரத்தில் வெளியே ஐந்தாம் பிறை சிரித்துக்கொண்டிருந்தை கண்டவனின் புத்தி சட்டென்று அவனின் நிகழ்காலத்தை உணரவைத்தது. பெரும் அதிர்ச்சியில் மீள்பதிவு கவிதையாய் தன்னையே உணர்ந்தவனுக்கு அப்போதுதான் புரிந்தது . அது நள்ளிரவு 12 மணியாகும் தருணமென்று. எதிர் இருக்கையில் கருவாச்சி காவியம் 43 ம் பக்கத்தை விரித்து கொண்டு அழுதுக்கொண்டிருக்க , கருவாச்சியை வாசித்த வாசுதேவனின் கருவாச்சி ,கற்பனாவின் உருவமோ மாயம்..!

ஒரு கூர்மையான கத்தி தன் தலையில் ஆழமாக பாய்ந்துவிட்டதோ என்கிற மாயையில் தன் கரத்தால் தன் தலைமுடிகளை பற்றி கதற ஆரம்பித்தான். இவனின் கதற ஒலியில் நூலகத்தில் நெடுநாளாய் குடிக்கொண்டிருந்த பறவைகளின் சிறகுகள் சிறகடித்து எச்சரிக்கையாய் தம்மை பாதுகாத்துக்கொள்ள ஆயுத்தமாக.. வாசுதேவன் தன் அதீத உணர்ச்சி மிகுதியால் தன் கரங்களில் அவன் தலைமயிரை கொத்தாக பறித்து பிய்த்து எறிந்தான். எறிந்த தலைமுடிகள் யாவும் . நூலக அறையெங்கும் சிறகடித்து பறக்கத்தொடங்கியது நரைத்த வெள்ளை முடிகளாய்...!

நூலகத்தின் கட்டிடம் தன் உறுப்புகளை ஒவ்வொன்றாய் உதிர்த்துக்கொண்டிருக்கிறது.. வாசுதேவனின் தலைக்கு மேலே தொடங்கிகொண்டிருந்த அணைக்கப்பட்ட அலங்கார விளக்கு உயிர்போகும் அவசரத்தில் ஆடிக்கொண்டே ஆடிக்கொண்டே காற்றின் ஆட்டத்தால் .. ஆடிக்கொண்டே வாசுதேவனின் தலையில் சடாரென்று விழுவேனென்று காத்துக்கொண்டிருக்க.. வாசுதேவனின் விழிகளோ கற்பனாவின் விழிகளில் எழுந்த காதல் வீச்சை மீண்டும் மீண்டும் எதிர்நோக்கி ஏங்கியது ஏங்கினாலும் தீராது என்று எண்ணியவரின் தலையின் மீது விழுந்தது அந்தரத்தில் ஊசலாடிய அலங்கார விளக்கு..!

விழும் நொடிக்கு முன் நொடி வாசுதேவ பெரியவர் சற்று நகர்ந்தவிட்டதால் பலமான காயமின்றி லேசான காயத்துடன் மயங்கி சரிந்து சற்று நிமிடங்களில் விழி முழித்து தண்ணீர் தாகத்தோடு, புத்தி தெளிந்தவராய்... கையில் பழைய புத்தகமான “ மூன்றாம் உலகப்போர் மற்றும் கருவாச்சி காவியம் “ ஆகிய இரண்டையும் கையிலெடுத்து பின்பு, நூலகத்தை விட்டு வெளியேறியனார்... நூலக வாசலை அடைந்தவரின் பார்வையில் ஒர் அறிவிப்பு பலகை “ , திருவல்லிக்கேணி கிளை நூலகம், சென்னை மாநகராட்சி --உபயோகமற்ற கட்டிடமாக கருதி 2014 ம் ஆண்டு கைவிடப்பட்டது ”

தனக்கு தானே மெலிதாக சிரித்த வாசுதேவனின் காதில் ஒரு போராட்ட கோஷம்...!

வேண்டும் வேண்டும் தண்ணீர் வேண்டும்...! உயிர் வாழ தண்ணீர் வேண்டும் ..!!

ஆக்ரோஷமாக ஒரு போராட்டகுழுவினர் அரைகுறை ஆடையுடன் கத்திக்கொண்டு செல்ல.... சற்று தொலைவில் ஒரு ரோபோ எந்திரம் தன் கையில் 10 மிலி தண்ணீர் குடுவையை வைத்துக்கொண்டு கூவி கொண்டிருந்தது. ஒன்லி 10,000 ரூபீஸ்.. டிஸ்கெவுண்ட் ஆஃபர் பார் யூ என இயந்திரத்தனமாய் கூவிக்கொண்டிருக்க அதனை சுற்றிலும் பிளாஸ்டிக் பத்தாயிரம் ரூபாய் தாளை கையில் ஏந்தி ஈக்களாய் மாக்கள்.. மன்னிக்கவும் மக்கள். !

மீண்டும் மெலிதாக சிரித்த வாசுதேவன் .. தன் கையிலிருக்கும் வைரமுத்துவின் “ மூன்றாம் உலகப்போர் “ புத்தகத்தினை பெருமிதத்துடன் பார்த்தார். கவிப்பேரரசு வைரமுத்து தீர்க்கதரிசியாக இப்போது வாசுதேவனின் மனதில்..!

தன் கற்பனாவின் ஆசை புத்தகமான கருவாச்சி காவியமும்.. தனக்காக மூன்றாம் உலகப்போரும் எப்போதும் அவர் கையிலிருக்கும். முதன் முதலாக தன் கற்பனாவை பெண் வடிவில் கண்ட டிசம்பர் 31 ம் தேதி இந்த நூலகத்திற்கு வந்து தன் காதலியுடனான முதல் சந்திப்பை நினைவு கூர்ந்து , சுய நினைவு இழந்து விடுவது வாசுதேவனின் பழக்கம்.

கற்பனாவை சந்திக்க சாந்தோம் சர்ச் கல்லறைக்கு விறுவிறு என்று நடந்தே சென்றார்.. அவர் செல்லும் வழியெங்கும் ஆண்டு 2050 ஐ வரவேற்று யுவன் யுவதிகள் நாகரீகமாக நிர்வாணமாக முத்தமிட்டு கொண்டிருந்தனர்.


****தன் கற்பனை உருவத்திற்கு கனகச்சிதமாக பொருந்திய ரீனாமேரி..திருவல்லிக்கேணி நூலகத்தில் விழி வழி பார்வையால் காதல் போதையேற்றி காதல் வயப்பட்டாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் 2011 ம் ஆண்டில் ஒருநாள் வாசுதேவனை புறக்கணித்துவிட்டாள். புறக்கணித்தவளை மறக்கமுடியாமல் கொலைசெய்துவிட்டார் இந்த முன்னாள் குற்றவாளி வாசுதேவன்.****

கற்பனா...! கற்பனையே.....!!


(முற்றும்)

-இரா.சந்தோஷ் குமார்.



----------------------------
தோழமைகளே..!
இந்த தொடர்கதை ஒரு சிறு சோதனை முயற்சிக்காக மட்டுமே எழுதினேன். இந்த தொடர்கதையில் கதையை சொல்ல வர்ணனைகள் மட்டுமே எழுதியிருக்கிறேன் . கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் இடம் பெற்றிருக்காது. நன்றி..! நன்றி..!

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (14-Dec-14, 6:36 pm)
பார்வை : 208

மேலே