என் வலிகளில் சில - சகி
பிரிவே
முள்ளாக குத்திய
உன் வார்த்தைகள்
என்னுள் ஆறாத ரணமாய்...
புரிதலான அன்பென
எண்ணி முட்டாள் ஆனேன்...
புரியாத காதலாகவே
பிரிந்து சென்றாய் ...
என் அன்பு மட்டும் என்றுமே
உனக்கு புரியபோவதில்லை ...
வருத்தமில்லை ...
எதிர்ப்பார்ப்பு என் குற்றமே...
உன் அன்புக்கு ஏங்கிய
முட்டாள் நான்...
என் வலிகளுக்கே
நன்றி சொல்கிறேன்....
உன் எண்ணம் போலவே
உன் வாழ்வும் மலரட்டும் ...
வாழ்த்துகிறேன்...
உன்இல்லற வாழ்வு
இனிதாய் அமையட்டும்....