நீலக்குயில் தேசம்13---ப்ரியா

ராஜலெட்சுமியின் முகவரியை கண்டுபுடிக்க சென்ற அரவிந்துக்கு அது உள்ஏரியா என்பதால் உடனே கண்டுபுடிக்க முடியாமல் இருந்தது அந்த சமயம் ப்ரியதர்ஷினி ஸ்கூட்டியில் அவன் கண்முன் தோன்றினாள் ஆனால் இவன் பேசுவதற்குள் மின்னலாய் மாய்ந்தும் போனாள் சிறிது நேரத்தில் உடம்பில் சிறு காயங்களுடன் அவள் ஓடிவந்து கொண்டிருக்க அவளை 3பேர் துரத்தி கொண்டுவந்தனர்.......என்ன...?என்று இவன் யோசிப்பதற்குள் இவள் முதலில் சென்ற ஸ்கூட்டியின் பின்னமர்ந்திருந்த அந்த இன்னொரு பெண் வேகமாய் இவளருகில் வந்து இவளையும் ஏற்றிவிட்டு மறுபடியும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த இடத்தைக்கடந்திருந்தனர்................

அவர்களை துரத்திவிட்டு வந்தவர்கள் இன்னும் வேகமெடுத்து அந்த பெண்களை பின் தொடர......"வேறு வழியே இல்லை" என மனதிற்குள் நினைத்த அரவிந்த் அவ்ர்கள் சென்ற திசையை நோக்கி அந்த மூன்று பேரில் இவனும் ஒருவனாய் துரத்தினான்.............அவர்கள் துரத்துவது எதற்கு? என்று இவன் அறியவில்லை....?இவன் தேடல் ஒன்றை மட்டும் மனதிற்குள் நினைத்துக்கொண்டு இன்னும் வேகமெடுத்தோடினான்...அரவிந்த்..... ??????

சிறிது தூரம்தான் முடிந்தது அதற்குள் களைப்பில் வந்தவனில் ஒருவன் அப்படியே நிற்க இன்னொருவன் "எங்கே போயிடப்போறா நம்ம மார்க்கெட் ரோடுதானே பார்த்துக்கலாம்" என்று முணுமுணுக்க அரவிந்துக்கு அந்த இடம் பிடிகிடைத்தது......அந்த மூன்றுபேரின் கண்களிலிருந்து தப்பித்து மெல்ல நகர்ந்தான் நடந்தே போனான் வழியில் சிலரிடம் விசாரித்து விட்டு அவர்கள் சொன்ன விலாசப்படி ஒரு வீட்டின் முன் போய் நின்றான் அந்த ஸ்கூட்டி அங்கு இருந்ததைப்பார்த்ததும்...அப்பாடா எப்டியோ சரியா வந்து சேர்ந்துட்டோமென்று பெருமிதம் கொண்டான்.

அழைப்புமணியை கொடுத்தான் இரண்டுமூன்று முறை கொடுத்தும் யாரும் வெளிவரவில்லை அதன் பிறகு கொஞ்சம் நடுத்தர வயது பெண் ஜன்னலை திறந்து பார்த்துவிட்டு வெளியே வந்தாள்........

யாரென்று கேட்டாள்...?இவனோ பதில் சொல்லாமல் வீட்டிற்குள் பார்வையை செலுத்தினான்.......

ஹலோ......யாரப்பா நீ?உனக்கு என்ன வேணும்? இங்கு யாரைத்தேடுகிறாய் என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.

அம்மா...அது வந்து......உங்க பெயர் ராஜலெட்சுமி தானே என்று தாழ்ந்த குரலில் கேட்டான்.

ஆமா நீ..........என்று கொஞ்சம் பயந்த குரலில் கேட்டாள் ராஜூ.

நான் யாருங்கிறது அப்புறம் சொல்றேன்மா......உங்களுக்கு அப்பா அம்மா ஒரு அண்ணன் குடும்பம் இருக்கிறது நினைவிருக்காமா? என்று கேட்டான்............கேட்டதுதான் தாமதம் ராஜலெட்சுமி அழுதே விட்டாள் அதற்குள் உள்ளிருந்து ப்ரியதர்ஷினியும் அவள் தோழியும் வெளியே வந்தனர்.

அம்மா ஏம்மா அழறீங்க?யாரும்மா இவங்க என்று கேட்டவள் அவனை உற்றுப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்தாள், தன்னை துரத்தியவர்களில் இவனும் ஒருவன்!!!!

டேய் உங்களுக்கு என்னடா வேணும் ஒருமுறை என்னிடம் வம்பிழுத்ததற்காக நான் ரோடென்றும் பார்க்காமல் அவமானப்படுத்தியது உண்மைதான் அதற்காக இப்படியா காணும் இடமெல்லாம் துரத்தி துரத்தி சாகடிப்பீர்கள் என்று அவனது பதிலையும் கேட்காமல் கோவமாய்க்கத்தினாள் ப்ரியா.......!!!!

ராஜலெட்சுமிக்கு எதுவுமே புரியவில்லை......ஏய் என்னடி சொல்றா இவன் உன்னிடம் வம்பிளுத்தானா?
உன்னைதுரத்தினானா?அவன் யாருன்னு தெரியுமாடி.......என்று புரியாமல் கேட்டாள்......?

ஹலோ ஹலோ ரெண்டுபேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா நான் பேசுறேன் என்றான் அரவிந்த்.......?

ராஜலெட்சுமிஓடி வந்தது ராகேஷ் வீட்டில் இவர்கள் குடியிருந்தது முதல் இன்று நடந்தது வரை ஒன்று விடாமல் சொல்லி முடித்தான் அரவிந்த்........."அம்மா இவன் பொய் சொல்றான் இவன் வந்ததன் நோக்கம் வேற ஏதோ கவனமா இருங்க"என்று அவன் காது படவே பேசிவிட்டு அவனை சந்தேகமாய் பார்த்தாள்........!

அவளது பேச்சையும் பார்வையையும் பார்த்த அரவிந்த் சிரித்தான்.....இவன் என்ன லூசா என்று அவள் சொல்ல...?

"நீ உருவத்தில் மட்டும் தான் கயல்விழியைப்போல் இருக்கிறாய் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் குறும்பிலும் பேச்சிலும் அவள மாதிரியே இருக்கிறாய்" என்று சொன்னான்......

கயல்விழியா?யாரவள் என்று கேட்ட ப்ரியதர்ஷினி அவள் அம்மா ராஜலெட்சுமியைப்பார்த்தாள்...??????

_____________________________________________________________________________________________________

ராகேஷின் நினைவில் உறங்கிப்போன கயல் நாளைக்கு எப்படியாவது அவனைப்பார்த்து நம் காதலை சொல்ல வேண்டும் என்று முடிவோடு காலைக்கடன்களை முடித்து விட்டு புறப்பட்டாள்.........முதலில் தன தோழிகளிடம் கனவுக்காதலனை பார்த்ததாக சொன்னாள் அப்டியா?யாருடி அது முகம் எப்டி இருந்திச்சி அழகா இருந்தானா சாமந்தி வாசமும் சந்தண வாசமும் சேர்ந்திடுச்சா என்று கலாய்ப்போடு விசாரித்தார்கள்......

அவன் வேற யாருமில்லடி என் ராகேஷ் தான் என்று பதிலளித்தாள் என்ன உன் ராகேஷா?அடிப்பாவி அதுக்குள்ளால இப்டியா? கொஞ்சநாள் போனா நம்மளையே இவ மறந்திருவாடி ஜாக்கிரதையா இருக்கணும் என்று சொல்லிவிட்டு சரிடி இன்னிக்கு ராகேஷ்கிட்ட உன் காதலை சொல் என்று ஆர்வப்படுத்தினர் அவளது ஆருயிர்த்தோழிகள்
இருவரும்.........சரிடி சொல்றேன் என்று வெட்கத்துடன் புன்னகைத்தாள் கயல்....!

கல்லூரிக்கு சென்றவள் முதலில் ராகேஷின் தோழியும் அரவிந்தின் காதலியுமான திவ்யாவைப்பார்த்து விஷயத்தை சொன்னாள் அவளும் சந்தோஷமாய் உற்சாகத்துடன் இவளை அணைத்துக்கொண்டாள்.இவளது கனிவு இவளை இன்னும் சந்தோஷப்படுத்தியது.....!

வகுப்பிற்குள் சென்றவளின் கண்கள் தன் மன்னவனை நோக்கின இவளது பார்வையையும் அதன் தவிப்பையும் அதிலிருக்கும் காதலையும் புரிந்து கொண்டு ஒரு அழகிய புன்னகையை கொடுத்தான் அவன்......இதுவரை அவனது பார்வையை நேருக்குநேராய் பார்க்காதவள் இன்று அவன் விழிகளை நோக்கியபோது மனது ஆல்கஹால் உண்டதை போன்று தள்ளாடுவதை உணர்ந்தாள் என்றும் இல்லாத அளவுக்கு இன்று ஒரு புது அனுபவத்தை உணர்ந்தாள் கயல் சாயங்காலம் தனியே சந்தித்து காதலை சொல்ல திட்டமிட்டிருந்தாள் கயல் அதற்கு பக்காவாய் தோழிகளும் உடனிருப்பதாய் தைரியமூட்ட சந்தோஷமாய் அவள் அவனைக்காண அவர்கள் கல்லூரியில் ஆடிட்டோரியத்துக்கு பக்கத்திலிருக்கும் அழகிய பலவண்ண பூஞ்செடிகளால் சூழப்பட்ட அந்த ஆலயத்திற்குள் தோழிகளுடன் காலடி எடுத்து வைத்தாள்.......

அங்கு நிறைய மாணவர்களும் ஆசிரியர்களும் உட்கார்ந்திருந்தனர்........சிலர் மௌனமாய் அமர்ந்து கண்களைமூடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்,ஒரு சிலர் பிரார்த்தனையை முடித்துவிட்டு மெல்லிய குரலில் யாருக்கும் தொந்தரவு தராதபடி பேசிக்கொண்டிருந்தனர்,இன்னும் சிலர் தங்களின் நண்பர்கள் வருகையை எதிர்பார்த்து நோக்கிக்கொண்டிருந்தனர்.

ராகேஷ் இருந்த இடத்தை கண்டுபுடித்து அவந்து இருக்கைக்கு பின்னால் சென்றனர் தோழிகள் மூவரும்............"ராகேஷ் உன்கிட்ட பேசணும் கொஞ்சம் வெளில வா" என்று சொல்ல இதழ்களை விரித்தாள் கயல்.....
அதற்குள் அவளின் பின்னிருந்து ஒருகுரல்"ஹலோ மிஸ் கயல்விழி உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும் வெளில வாங்க" என்று அழைத்தது................!






தொடரும்..........!

எழுதியவர் : ப்ரியா (15-Dec-14, 1:37 pm)
பார்வை : 267

மேலே