நடிகர்களைத் தேடி

என்னய்யா திடீர்ன்னு நம்ம தயாரிப்பாளரும் டைரெக்டரும் வெளிமாநில சுற்றுப்பயணம் கெளம்பீட்டாங்க?

பாரதியார் வேடத்திலெ நடிக்க தகுதியான நடிகர்களோ நபர்களோ தமிழ் நாட்டிலேயே இல்லன்னுதானே வடக்கே இருந்து ஒருத்தரப் பிடிச்சிட்டு வந்தாங்க.

ஆமாம். தமிழ் நாட்டிலே நல்லா நடிக்கறதுக்கும் பாடறதுக்கும் ஆயிரக்கணக்காணவங்க இருந்தும் அவுங்களத் தேடிக் கண்டுபிடிக்க இவுங்களுக்குக் கொஞ்சங்கூட ஆர்வம் இல்லை. அதுக்கு நாம என்ன செய்யறது?

பாரதியாரா நடிக்க வேற மாநில நடிகரைத் தேடிப்பிடிச்சிட்டு வந்த மாதிரி நம்ம இயக்குனரும் தயாரிப்பாளரும் சுதந்திரப் போராட்ட வீரர்களான வாஞ்சிநாதன் திருப்பூர் குமரன் வேடத்திலெ நடிக்க வடக்கே இருந்து இரண்டு நடிகர்களைத் தேடி கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு வரப்போறாங்களாம்.

ஓ ….. அப்பிடியா? சரி…. சரி. எப்பவுமே தமிழன் தமிழனை மதிக்கமாட்டான்.

எழுதியவர் : மலர் (16-Dec-14, 11:36 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 194

மேலே