சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 25 ப் ரோவ பா ரமா ரகு ராம – ராகம் பஹுதாரி

'பஹுதாரி' என்ற ராகத்தில் அமைந்த 'ப் ரோவ பா ரமா ரகு ராம' என்ற பாடலின் பொருளும், பாடலும் கீழே தருகிறேன்.

பொருளுரை:

இரகுராமனே! புவனங்களனைத்திலும் நீயே நிரம்பியிருந்தும் இத்தியாகராஜன் ஒருவனைக் காப்பது உனக்கு பாரமா!

ஸ்ரீவாசுதேவ! அண்டகோடிகளை உன் வயிற்றினுள் நீ அடக்கவில்லையா?

(ஒரு முறை) தேவர்களுக்காக மனமிரங்கிச் சமுத்திரத்தில் மந்தர கிரியையும், அதுவுமன்றி (மற்றொரு முறை) கோபியருக்காக கோவர்த்தன கிரியையும் நீ தாங்கவில்லையா? கருணகர! (இத்தியாகராஜன் ஒருவனைக் காப்பது உனக்கு பாரமா!)

பாடல்:

பல்லவி:

ப் ரோவ பா ரமா ரகு ராம
பு வநமெல்ல நீவை நந்நொகநி (ப் ரோவ)

அனுபல்லவி:

ஸ்ரீவாஸுதே வ அண்ட கோட்ல கு-
க்ஷிநி உஞ்சுகோலேதா நந்து (ப் ரோவ)

சரணம்:

கலசாம்பு தி லோ த யதோ நம-
ருலகை யதி கா க கோ பி-
கலகை கொண்ட லெத்தலே தா
கருணாகர த்யாக ராஜுநி (ப் ரோவ)

பஹுதாரி ராகத்தில் அமைந்த இப்பாடலை CARNATIC VOCAL | SONGS OF THYAGARAJA | JUKEBOX என்று கூகிலில் பதிந்து, பிரபல குரலிசைக் கலைஞர் நெய்வேலி சந்தான கோபாலன் பாடுவதைக் கேட்கலாம்.

பஹுதாரி ராகத்தில் அமைந்த இப்பாடலை CARNATIC VOCAL | NINE GEMS OF THYAGARAJA | SUDHA RAGUNATHAN | JUKEBOX என்று கூகிலில் பதிந்து, பிரபல குரலிசைக் கலைஞர் சுதா ரகுநாதன் பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Dec-14, 9:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 97

சிறந்த கட்டுரைகள்

மேலே