ஒரு தாயின் தாலாட்டு

எந்தன் வீட்டில் வந்துதித்த செல்லமே
எண்ணம் யாவும் பூரிக்கின்ற வைரமே
உந்தன் மேனி தொட்டுத் தூக்கும் போதிலே
ஈடு இணை ஏதுமில்லை பாரிலே.

தாய்மை எனக்கு தந்த தங்கமே
என் தாலாட்டு என்றும் உன் சொந்தமே
ஊரார்கள் வியக்கின்ற வண்ணமே
உன்னைச் சீராட்டி வளர்த்திடுவேன் திண்ணமே.

குலம் தழைக்க வந்த ரத்தினமே
குடும்பத்தின் மகிழ்ச்சியின் அடையாளமே.
அடியெடுத்து நீ நடக்கும் அழகினிலே
அடைகின்ற ஆனந்தம் பரவசமே.

மழலைச் சிரிப்பால் மயக்குகின்றாய்
பனியின் களைப்பை ஓட்டுகின்றாய்
உறவில் உயர்வை ஊட்டுகின்றாய்
நான் தாலாட்டு பாட உறங்குகின்றாய்

உன் கண்ணில் கபடம் ஏதுமில்லை
உன்னைவிட எனக்கு ஏதுமில்லை
உருவில் உயர்வாக்கி பூரிப்பேன்
உலகில் உயர்வாக்க போதிப்பேன்.

எழுதியவர் : ந. அலாவுதீன் (21-Dec-14, 12:59 pm)
பார்வை : 351

மேலே