நான் நல்லவன் இல்லை 1- சந்தோஷ்

வணக்கம்...!

ஒரு விபச்சாரியின் வீட்டின் முன்பு நின்று இந்த " வணக்கம் " வைக்கிறேன்...!!

---------------------
---------------------

ஒரு கணம் உங்கள் எண்ணம் என்னை " அடே நீ இப்படி கேவலமானவனா " என்று நினைத்திருந்தால்... நான் கெட்டவன்.

" சரி அதில் என்ன தவறு இருக்கிறது... என்ன விஷயம் சொல்ல வருகிறாய்? " என நீங்கள் நினைத்திருந்தால் .... நான் நல்லவன்,

நன்றாக கவனியுங்கள்.... நான் சொல்லிய சொல்லின் பொருளை உணர்ந்து என்னை உணருங்கள். நிச்சயம் நான் நல்லவனாக உங்களுக்கு தெரியாவிட்டாலும்.. தவறானவன் அல்ல என்று தெரியும்.


உங்களில் பலருக்கும்...நான் விபச்சாரியுடன் கட்டிலில் உல்லாசமாய் இருந்தேனோ என தவறாக கணித்திருக்க கூடும்

== ஒரு விபச்சாரியின் வீட்டின் முன்பு நின்று ===

இந்த வாசகம்...." இவன் கெட்டவன் என்ற வாசம் வீசுகிறதா... ? விபச்சாரியின் வீட்டின் முன்பு நின்றிருந்தால் நான் கெட்டவனோ? இல்லை விபச்சாரிதான் கெட்டவளா ?




இப்படித்தான் இப்படியே தான் நம்மில் பலரும்...அவசரப்பட்டு ஒருவரை ஒருவர் தாறுமாறாக புரிந்துக்கொண்டு.. நம்மிடம் பரிமாறிக்கொள்ளும் அன்பை கொலைசெய்து திரிகிறோம்.

இந்த விஞ்ஞான.. அவசர உலகத்தில்..
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்....

தீர விசாரித்தாலும் பொய் தான்...!

ஏனெனில் நாமே நமக்கு பொய்முகமூடி போர்த்திக்கொண்டு. அலையும் போது.... அடுத்தவனின் மூக்கு சொரிந்து விசாரணை செய்ய நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது..?

மனதளவில் ஒரு குணம்..!
ஊராரின் வாய் பேச்சுக்கு வசப்படாமல் தப்பிக்க ஒரு குணம்..!
மனச்சாட்சியை மறந்து மனிதநேயத்தை ரகசியமாக கொன்றுக்கொண்டே.,. வெளித்தோற்றத்தில் , எழுத்தில் , நாவில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் திலகங்கள் நம்மில் பலர் உண்டு...!

நட்பு என்றும், பாசம் என்றும், நேசம் என்றும், காதல் என்றும், பலபெயரில் அழைக்கப்படும் அன்பினை ஆயுதமாக்கி எத்தனை இதயங்களில் ரணங்களை படைத்திருப்போம்.. யாவரும் அல்ல.. .. நான் அல்ல என்று உடனடியாக உங்களில் பலர் வியாக்கினம் பேசி.. பொய் என்று கூட அறியாமல் பொய் பேசி பேசி பேசி பேசிக்கொண்டே நல்லகுணமுடைய மனிதனாக காட்டிக்கொள்ள படாத பாடுப்படுவீர்கள்.. நானும் உங்களில் ஒருவன் தானே...


ஆகையால் " நான் நல்லவன் இல்லை..."


இந்த கட்டுரை எதை நோக்கி பயணிக்கிறது.. ?
நான் நல்லவனே என்று எனக்கு நானே சான்றிதழ் கொடுப்பதற்கு இல்லை..!



என்னை கடந்த போனவர்கள் பற்றியது அல்ல....

இந்த கட்டுரை...., நான் சிலரை கடந்து வந்த பாதையில் நானென்கிற சுய அலசலில் ஒரு சமூக கோபத்தை.... சமூகத்தின் மீது காட்டவே.....


புரிகிற மாதிரியே சொல்கிறேன்....!

நான் நல்லவன் என்று சொல்ல நீங்கள் கெட்டவர்களாக இருக்க வேண்டும். ?
நான் கெட்டவன் என்று சொல்ல நீங்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்..?

நான் என்பது நீங்களாகவோ
நீங்கள் என்பது நானாகவோ இருக்க கூடும்..!


இந்த பதிவு நான் என்ற நாணிலிருந்து எட்டு திசையும் வில்லாக பாயும்... !

மொத்தத்தில்.........

யாரையும் குறை சொல்லும் பதிவு அல்ல..! என்னை குறை சொல்லும் இந்த சமூகத்தை குறையாக நான் பார்க்கும் பதிவு...!


நான் நல்லவன் இல்லை....!

(தொடர்ந்து எழுதுகிறேன்......)



-இரா. சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (21-Dec-14, 6:51 pm)
பார்வை : 518

மேலே