தலை எழுத்து

நல்லது நடந்தால் நல்ல எழுத்து என்பார்
கேட்டது நடந்தால் சாமி புண்ணியம் என்பார்
அடை மழையாக அதிஸ்டம் வந்தால் கடவுளையும் நினையார்
கேட்டது மட்டும் நடந்துவிடாமல் விட்டால் எழுத்தை மட்டும்
பிழை சொல்வார்
அது தலை எழுத்து தானே என்று வாழாது இருந்து விட்டு
அது கடவுளின் பிழை என்பார்
முயற்சியை எம்மிடம் இருந்து தூர விலக விட்டு விட்டால்
வெற்றியும் எம்மிடம் இருந்து தூர விலகும் - என்பதனை மட்டும்
ஞாபகத்தில் வைத்திருங்கள் மானிடரே - அதிஸ்ட எண் என்றும்
அதிஸ்ட கல் என்றும் மானிடரை ஏமாற்றும் மனிதர்கள் உள்ளவரை
ஏமாறும் ஜென்மங்கள் உள்ளவரை இது என்றும் நடந்துகொண்டே இருக்கும்
நாள் முழுதும் நித்திரை கொண்டு கொண்டு வெற்றியை வா என்று அழைத்தால் எப்படி வரும்???
வெறும் வாய்ச் சவடால் மட்டும் போதுமா என்ன சொல்லுங்களேன்!!!

எழுதியவர் : puranthara (22-Dec-14, 6:48 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : thalai eluthu
பார்வை : 169

மேலே