சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 27 பண்டுரீதி கொ லு – ராகம் ஹம்சநாதம்

'ஹம்சநாதம்' என்ற ராகத்தில் அமைந்த 'பண்டுரீதி கொ லு' என்ற பாடலின் பொருளும், பாடலும் கீழே தருகிறேன்.

பொருளுரை:

இராம! உனது சமூகத்தில் சேவகனாகப் பணிபுரியும் பேற்றை அளிப்பாயாக.

(கரும்பை வில்லாகயுடைய மன்மதனின் சேஷ்டையாகிய) காமம் முதலிய எதிரிகளைப் பிடித்து நிர்மூலமாக்கும் ஆற்றல் கொண்ட உன் (சேவகனாகும் வாய்ப்பை அருள்வாயாக).

(உனது பக்தியின் மூலம் ஏற்படும்) உடல் சிலிர்ப்பு என்ற கவசமும், இராம பக்தன் என்ற முத்திரை வில்லையும், இராம நாமமென்னும் சிறந்த போர்வாளும் இத்தியாகராஜனிடம் விளங்குகின்றன. ஐயனே! உன் சேவகனாகும் வாய்ப்பை அருள்வாயாக இராம!

பாடல்:

பல்லவி

ப ண்டுரீதி கொ லுவிய்யவய்ய ராம (ப)

அனுபல்லவி

துண்டவிண்டிவாநி மொத லைந மதா
து ல ப ட்டி நேல கூ ல ஜேயு நிஜ (ப)

சரணம்

ரோமாஞ்சமநே க நகஞ்சுகமு
ராமப க்துட நே முத் ரபி ள்ளயு
ராமநாமமநே வரக ட் க மிவி
ராஜில்லுநய்ய த்யாக ராஜுநிகே (ப)

Chittoor Subramanya Pillai என்று வலைத்தளத்தில் பதிவு செய்து மதுரை சோமசுந்தரத்தின் குருநாதர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை ’பண்டு ரீதி கொலு’ என்ற பாடலைப் பாடுவதைக் கேட்கலாம்.

Bantureethi - Swaralaya Puraskaram என்று வலைத்தளத்தில் பதிவு செய்து M.S.சுப்புலட்சுமி பாடுவதைக் கேட்கலாம்.

banTureeti kOlu - hamsanAdam - Adi என்று வலைத்தளத்தில் பதிவு செய்து மதுரை T.N.சேஷகோபாலன் பாடுவதைக் கேட்கலாம்.

Madurai Somasundaram- Bantureethi-Hamsanadham என்று வலைத்தளத்தில் பதிவு செய்து மதுரை சோமசுந்தரம் பாடுவதைக் கேட்கலாம்.

Bantureethi Kolu Song (Thyagaraja Keerthana) என்று வலைத்தளத்தில் பதிவு செய்து K.J.ஜேசுதாஸ் பாடுவதைக் கேட்கலாம்.

Flute J.A.Jayanth presents Bantureethi Kolu- Rag Hamsanadam-Adi என்று வலைத்தளத்தில் பதிவு செய்து J.A.ஜெயந்த் புல்லாங்குழலில் இப்பாடலை வாசிப்பதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Dec-14, 8:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 1026

மேலே