அவன் காதல் மாறவில்லை

ஒரு நாள் அவன் காதலை
கொடுத்தான்.
நான் மறுத்தேன்.

எப்போதும் உனக்காக
காத்திருக்கும் என் மனம்
என்று சொல்லி சென்றுவிட்டான்.

அன்று முதல் அவனை
மறக்க முடியாமல்
வெந்தேன் தினமும்.

எவ்வளவோ யோசித்தும்
புரியவில்லை.
நான் ஏன் இப்படி ஆனேன் என்று.

முதல் நாள் என் வகுப்பறை
விழிகள் அலைமோதியது .

பார்த்ததும் கண்டுவிட்டேன்
அதே கருநில கண்கள்.
உதட்டில் எப்போதும் மறையாத சிரிப்பு.

நான் யார் என்று அவனுக்கு
தெரியவில்லை போலும்.

தீயிட்ட காயங்களும்
மறைந்து விட்டது.
என் மனதை வாட்டிய
அவன் காதல் மட்டும் மறைய வில்லை .

அவன் நிழலுடன் சேர்ந்து
நடந்தேன் தினமும்.

என் மனதோடு ஒற்றிய அவன்
நிழல்.
தினமும் பேசியது என்னிடத்தில்.

அவன் கருவிழி பார்வையில்
படமாட்டேனா என்றே
தினமும் சென்றேன் கல்லூரிக்கு.

என் கருவிழி கரைப்புரண்டது
அவன் பார்க்கவில்லை என்று .

உன்னை விட்டு பிரிய
அவன் யார் அவனாகவே
நீ இருக்க என்று
ஓர் அசீரிரி .

அழுது தேய்ந்தது மனமும்
மெலிந்து போனது உடலும்.
இனி முடியாது என்று
கேட்டு விட்டேன் அவனிடத்திலேயே.

என் தேவதை சொன்ன
ஒரு வார்த்தைக்காக
காத்திருக்கிறேன்.

5 வருடங்களாக என் மனதில்
அவள் நினைவுகளை மட்டும் சுமந்துக்கொண்டு .
என்று அதே புன்னகையுடன் நின்றான் அவன் .

எழுதியவர் : புவனா சக்தி (26-Dec-14, 11:24 am)
பார்வை : 558

சிறந்த கவிதைகள்

மேலே