என் தந்தையே -சகி
@@ தந்தையே @@@
எண்ணற்ற அன்பில்
என்னை வளர்த்த என்
அன்பு தந்தையே....
கருவில் சுமந்தாள்
என் அன்னையவள் ...
மாரில் சுமந்தாய்
அன்னையாய் நீ என்னை ....
தவழும் வயதில்
நான் செய்த சுட்டி குறும்புகளை
கண்முன்னே வார்த்தைகளாக
தாலாட்டு பாடுகிறாய் இன்றும்....
உன் மார்பில் நான்
உதைத்த அடிகளும் சுகமென
சொல்லி கொஞ்சுகிறாய் ....
மகனாய் பிறக்க வரம்
வேண்டும் இனியொரு பிறவியில்
உனக்கு நான் தாலாட்டு பாட...
என்றுமே திகட்டாத
அன்பு என் மேல் நீ கொண்ட
பாசம் மட்டுமே...
என் கிறுக்கல்களையும்
ரசித்து தட்டிக்கொடுத்தாய் ...
விழுந்து நான் எழ
உன் கரம் கொடுக்கிறாய்
இன்று வரை ....
உன்னிடம் நான் கற்றுக்கொண்ட
பாடங்கள் பல ....
மரியாதையாக மற்றவர்களை
மதிக்க கற்றுக்கொண்டேன்
உன் வார்த்தைகளில்...
அன்புக்கு அடிமையானான்
தந்தையே உன் அளவற்ற
நேசத்தில்....