மீண்டும் விளைந்து விடு நீ
இளம் விதவை நீ என்று என்
இதயத்தை கொடுத்தேன் நான் இன்று
இனிமேலும் இப்படியாய்
வாழாதே நீ என்றும்..
பூவும், பொட்டும் நீ வைத்து
புதுமையாய் புது வாழ்வு நீ பெற்று
பெருமையாய் வாழ்ந்து விடு
என்னோடு இங்கே நீ .
உலகமே அறியும் படி
உன்னை நான் என்னவளாய்
உறுதியுடன் உன்னை என்
மனைவியாய் மாலையிட்டு.
மறுமணம் செய்வேன் நான்
நீ விதவையாய் வாழாதே
விளைவும் இந்த பூவினிலே
மீண்டும் விளைந்து விடு நீ. .