வால் நிலவு
வால் நட்சத்திரம் விண்ணில் உண்டு
வால் நிலவு ரசிக்கும் ரசனையில் உண்டு
நிலவென்பது அவள் முகமே
நேர் வகிடென்பது வால் அதுவே...!!
ஒளிரும் காதல் அது இனிதே - மெல்ல
ஓசையின்றி பேசும் உணர்வே - என
காதலித்தால் கவியுணர்வு புரியும்
கவலை வேண்டாம் கவிதை செய்வீர்...!!