இலக்கணக் கவிதை ஒன்று

இலக்கணக் கவிதை எனப்படுவது
இதழ் விரித்து புன்னகை செய்வதென்பது

இனிமை என்று உணரப்படுவது
இதயம் வலிக்காத சொல் தொடுப்பது

இன்னல் என அறியப்படுவது
இருக்கும் நிறையை குறையென நினைப்பது

இதுவே நிம்மதி என்று முடிப்பது
இறுதியில் இறைவனை சரணாகதி ஆவது

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் வா (28-Dec-14, 3:44 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 59

மேலே