நாம்

நம்மை அறியாமல்
நம் முகபாவங்களை பார்த்துணராமல்
நம் குணம் கண்டுணராமல்
நம் இருப்பிடம் எதுவென தெரியாமல்
நம் நாகரிகம் காணாமல்...

நினைவில் ஏதுவுமில்லாமல்
நம் வாழ்வியல் பால் தீவிர காதலில்
நாம் சந்திப்பது நிஜமென
நிம்மதியாக நிமிடங்களை தற்போது
நாம் கடந்து பயனிக்கின்றோம்...

நம் திசைகள் வேறாயினும்
நாம் கடந்த வந்த பாதை எதுவாயினும்
நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும்
நம்மை நாம் நேசிப்போம் இனி
நமது இயல்புகளோடு....

நாட்களின் இறுதியில்
நிலவொளியும் நிசப்தமும்
நல்லிசையும் வருடும் தென்றலும்
நம் தனிமை இரவுகளும்
நம்முள் நல்லிணக்கத்தையும்
நெஞ்சில் நெருக்கத்தையும்
நிறுவி விடுகிறது...

நிபுணா!
நீயும் என் போல்
நாட்களை நகர்த்தி கொண்டிரு
நாம் இணையும்
நேரம் வெகு அருகில் உள்ளது....

நின்னை எதிர் நோக்கி
நிம்மதியோடு காத்திருக்கும்
நின் இடப் பாதி நான்....

எழுதியவர்
சூரியா

எழுதியவர் : சூரியா (28-Dec-14, 4:21 pm)
Tanglish : naam
பார்வை : 64

மேலே