புத்தாண்டு வாழ்த்துக்கள்

பனிவிழும் பொழுது நடுநடுங்க
விரல்கள் கோலத்தை கிறுகிறுக்க
கோஷ்டி திருப்பாவை முனுமுனுக்க
தேயிலை கொதிநீரில் தகதகிக்க
விசேஷமான நாட்களில் யோசித்தாலும்
எங்களின் வேலை என்னமோ அதேதான்
வாகன ஒலிப்பான்கள் கூச்சலிட
பூனையும் நாயும் மிரண்டோட
பட்டாசு வெடிச்சத்தம் களேபறமிட
நடுநிசியில் புத்தாண்டு பூத்துவிட்டதாம்
சைக்கிளை வளைத்து ஓட்ட வேண்டும்
நாளேட்டை நாசுக்காய் எறியவேண்டும்
உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை
சுடசுட செய்திதாளுடன் வழங்கவேண்டும்