இன்றைய கல்வி
தாமரை மகளே!!!
இன்று களவு போனது
உந்தன் கல்வி கரங்கள்,
களவாடிய கயவர்களை
கண்டு சொல்ல கவிகுயிலும்
மண்ணுலகில்லை,
மண் ஆண்ட மன்னர்களை
தூது விடலாம் எனில்
அவர்களும் மாண்டு
போயீனர் இம்மண்
உலகை விட்டு,
இறுதியில் களவு
போன கரங்களை
நானே கண்டேண்
இன்றைய கல்விச்சாலையில்....
கயவர்கள் யாருமில்லை
இன்றைய கல்விச்சாலை
நிறுவனங்களே.

