சாலை விதிகள் - வாழ வழிகள்

"சாலைவிதிகள் ;வாழ வழிகள் ;"
அன்னை தந்தை ஆருயிர்க்கும் ,
அன்பில்விளைந்த காதலிக்கும்,
உண்மைபேசும் குழந்தைகட்கும்,
"உம்மா" கொடுத்து புற்படுவான் -
உடலைதாங்கும் முதுகெலும்பாய்..!
ஆசைவாழ்க்கை ஒருபுறத்தில்;
அடிமைவாழ்க்கை மறுபுறத்தில்;
பிரளும்தலையில் மணிகணக்கில்;
விரைந்துகிடப்பான் சாலையினை -
விதியைமீறும் வேதனையில்..!
சாலைவிதிகள் அறிந்திருந்தும் ,
சாகசமென்னும் போதையிலே..!
ஆளைதுரத்தும் அவனாட்டம் -
ஓசையின்றி போகுமொரு,
ஒழுக்கம்கெட்டவன் கையாலே..!.
விதிகளென்பது விளையாட்டாய் ,
விழிகளைமூட நீவரமாட்டாய்..;
மதுவைக்குடித்து மானங்கெட்டு,
மறந்துபோகும் ஞானமும்கெட்டு-
மடிவாய்ரோட்டில் உயிரைவிட்டு..!
படியில்நின்று பயணம்செய்வான்,
பார்க்க ரோமியோ பக்கமிருப்பான் ,
அக்கம்பக்கம் பார்த்து ரசித்து -
அழகை கையால்வாரிக்கொள்வான் ;
அடுத்தகணமே மோதிச்சாவான்..!
விதிகளென்பது சாலையின்மேலே,
விவேகமென்னும் வேகத்தினாலே,
முன்பின்னறிந்து வாகனமோட்டு;
முதுகெலும்பாய் நீ வாழ்ந்துக்காட்டு -
முடிந்தவரையில் அக்கறைகாட்டு..!