வாழ்க்கையின் இரயில் பயணம்

இரயிலும் வாழ்க்கையும்
மெதுவான வேகம்
நகரும் நானும்
நினைக்கிறேன் எதனை
தடுமாறினேன் இரயிலில்
சக்கரம் தாளங்கள் போட
இத்தருணம் நான் கொண்டாட
என் முன்னே நாயனம்
ஆனந்தம் இன் நிமிடம்
வேறு வேறு பாதை இருக்க
நேற்று நான் தனிமையில் தவிக்க
புயல் காற்று ஜன்னலில்
நிழல் பாதை உலகில்
நகரும் உலகம்
ஜன்னலும் நானும்
உன்னோடு இத்தருணம்
கொண்டாடு எதுவென்றும்
திரையில் கடக்கும் அனைத்தும்
வாழ்க்கையில் நடக்கும் சோகம்
கூடு உன்னை காக்க
நாடு உன்னை சேர்க்க
ஜன்னலின் ஓரம் கிடைப்பதில்லை
இருக்கை
வாழ்க்கையின் தூரம் தெரிவதில்லை
இக்கரை
.
இருப்பதை வைத்து செய்ய வியாபாரம் இல்லை
வாழ்க்கை
நடப்பதை காண மனம் கொள்ளடா
வாழடா கடந்துவிடும்
வேகமாக ஓடிவிடும்
மழையில் நனைந்தால் தான் தண்ணீர் தெரியும்
உன்னில் உணர்ந்தால் தான் உலகம் புரியும்
குறை கூறாதே
கறை மாறாதே
பாதை மாறாது காக்கும்
உணர்ந்ததை நெஞ்சில் சேர்க்கும்
இரயிலே
இறங்கிடுவேன் இப்போது
உணர்த்திடுவேன் உன் நட்போடு
-மனக்கவிஞன்