தோனி சென்று வா நீ
தோனி!!!!
இந்திய கிரிக்கெட் படை
தலைமையின்றி தவித்த போது
திறமான தலைவனாய்
உதித்தாய் தோனி!!
நீ ஒரு காலத்தில் தரவரிசை சிகரத்துக்கு
நீ ஏணியாய் இருந்ததை மறந்து சிலர் தோனி இனி நீ வீண் நீ எனஅவர் பாணியில் வர்ணிக்கின்றனர்!!!
வெள்ளை ஆடையனியம் இந்திய அணிக்கு இன்று கருப்பு துணி!!
இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும் போனாலும் ஏசும்
நீ போனால் தான் அது சாதனை பேசும்!!!
வெள்ளையை விட்டாய் நீயே!!
தலைவன் இல்லா
ஒரு அணி தனியே!!
இனி மெல்ல உன் பெயர் பேசும் தோனியே!!!
இன்று டெஸ்டுக்கு இறுதி ஆண்டு போல
அது போ நீ என துரத்துகிறது!!!
நீ போ இனி !!!
ஆனால் புத்தாண்டு வண்ணமையமாக இருக்க வேண்டும்
அதனால் வண்ண உடையொடு உலக கோப்பையை வெல்ல வா நீ !! தோனி!!!!
-சூர்யா

